புதுதில்லி:
மத்திய அரசு, கடன் வாங்கும் இலக்கை 2020-21 பட்ஜெட்டில் 7.8 லட்சம் கோடி ரூபாயாக வைத்திருந்தது. ஆனால், கொரோனா தாக்கத்தால், இந்திய பொருளாதாரம் மேலும் மோசமடைந்த நிலையில், கடன் இலக்கை 12 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.கடந்த வெள்ளிக்கிழமையன்று இதற்கான முடிவை எடுத்துள்ளது.
இதன்படி ஒவ்வொரு வாரமும் அதிகபட்சமாக 30 ஆயிரம் கோடிரூபாய் மதிப்பிலான பத்திரங் களை ஏலம் விட முடிவு செய்யப் பட்டு, அதன்படி மே 11 அன்று ஏலத் தையும் துவக்கியுள்ளது.30 ஆயிரம் கோடி ரூபாய்க்கு இரண்டாண்டு பத்திரங்கள், 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஐந்தாண்டு பத்திரங்கள், 1 லட்சத்து 80 ஆயிரம் கோடி ரூபாய்க்குபத்தாண்டு பத்திரங்கள், 1 லட் சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு பதினான்கு ஆண்டு பத்திரங்கள், 70 ஆயிரம் கோடி ரூபாய்க்கு முப்பதாண்டு பத்திரங்கள், 50 ஆயிரம்கோடி ரூபாய்க்கு நாற்பதாண்டு பத்திரங்கள் என 2020 - 21 நிதியாண்டின் முதல் 6 மாதங்களுக் குள் 6 லட்சம் கோடி ரூபாயை திரட்டமத்திய அரசு திட்டமிட்டு உள்ளது,இதையடுத்து, பத்திரங்களுக் கான வருமான விகிதம் (Bond Yield) அதிகரித்து இருக்கிறது. பத்தாண்டுகளுக்கான பத்திரங்களின் வருவாய் விகிதம் 5.98 சதவிகிதத் தில் இருந்து, 6.19 சதவிகிதமாக அதிகரித்து இருக்கிறது. கடந்த 2017 பிப்ரவரி-க்குப் பின், பத்தாண்டுப் பத்திரங்கள் கண்ட மிகப்பெரியவருவாய் விகித ஏற்றமாக இது பார்க்கப்படுகிறது.