tamilnadu

img

வலைப்பதிவுகள்... (மோடியின் சமீபத்திய மன் கீ பாத் நிகழ்ச்சிக்கு...)

பத்திரிகையாளர் நிசிம் மன்னாத்துகரேன்:

மோடியின் சமீபத்திய மன் கீ பாத் நிகழ்ச்சிக்கு 12 இலட்சம் பேர் தமது விருப்பமின்மையை பதிவிட்டதால் பா.ஜ.க.வின் யூ டியூப் குழு விருப்பம்/ விருப்பமின்மை எனும் விருப்பத்தேர்வு அம்சத்தையே நீக்கிவிட்டனர். 

                              ********

முகம்மது ரியாஸ், வாலிபர் சங்கத் தலைவர்:

2019ம் ஆண்டு தற்கொலை செய்த1,39,123 பேரில் தின ஊதிய உழைப்பாளிகள் 32,563 பேர். அதாவது 23%. இது கார்ப்பரேட் ஆதரவு நவீன தாராளமய கொள்கைகளின்  விளைவு என்பது தெளிவு. இதனை நீண்ட நாட்களாகவே நாம் எச்சரித்து வருகிறோம். அரசு கார்ப்பரேட்டுகளை மகிழ்விப்பதை விடுத்து சாதாரண மனிதர் குறித்து சிறிதாவது கவலை கொள்ள வேண்டும்.

                              ********

பத்திரிகையாளர் லட்சுமி சுப்பிரமணியன்:

வளர்ச்சி அடைந்த மாவட்டங்களுக்கு வங்கிகள் கடன் கொடுப்பது குறைக்கப்பட வேண்டும் என ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு ஆணையிட்டுள்ளது. இது அமலானால் தமிழகத்தில் 32 மாவட்டங்கள் பாதிக்கப்படும். தமிழகம் கூடுதலாக வளர்ச்சி அடைந்ததற்காக தண்டிக்கப்படுகிறதா?

                              ********

சிவா:

ரிசர்வ் வங்கியின் முடிவால் தமிழக சிறு குறு, விவசாய நிறுவனங்களு க்கு இனி கடன் கிடைப்பது குறையும். நம் வரியை எடுத்தார்கள், மொழியை பிடுங்கினார்கள், வேலையை எடுத்துக்கொண்டார்கள், புதிய நிறுவனங்களை எடுத்துச் சென்றார்கள், நாம் உழைத்து உருவாக்கும் தொழில்களையும் அழிக்கிறார்கள்.

                              ********

பத்திரிகையாளர் சீமா சிஸ்டி:

அந்தமான் கொடுஞ்சிறையில் 173 விடுதலை போராளிகள் மரண தண்டனை விதிக்கப்பட்டனர். 900 பேர் நாடு கடத்தப்பட்டு அங்கு சிறையில் இருந்தனர். இவர்களின் பெயர்கள் அங்கு நினைவு சின்னத்தில் உள்ளது. இப்பொழுது உருவாக்கப்படும் புதிய நினைவு சின்னத்தில் இவர்களில் 400 பெயர்கள் நீக்கப்படுகின்றன. இந்த 400 பேரும் கம்யூனிஸ்டுகள் மற்றும் முஸ்லிம்கள். சவார்க்கர் பெயர் இரண்டாவது முக்கிய போராளியாக சேர்க்கப்படுகிறது. சவார்க்கர் மன்னிப்பு கடிதங்கள் எழுதினார். 400 பேரில் ஒருவர் கூட மன்னிப்பு கோரவில்லை.

                              ********

பத்திரிக்கையாளர் அங்குர் பரத்வாஜ்:

அரியானா குரு சேத்திரவில் மிகப்பெரிய எண்ணிக்கையில் போராடிய விவ சாயிகள் மீது காவல்துறையினர் கொடூரத் தாக்குதல் நடத்தும் இன்னொரு புகைப்படம் இது!  பல்லாயிரக் கணக்கான விவசாயிகள் போராட்டம் நடத்திய போதும் பெரும்பான்மையான ஊடகங்கள் இதனை சொல்லவில்லை.

                              ********

பத்திரிகையாளர் ஸ்ரீதர்:

முகநூல் நிறுவனத்திலிருந்து இன்னொரு மென்பொருள் பொறியாளர் அஷோக் சந்த்வானி ராஜினாமா! முகநூல், வெறுப்பு பிரச்சாரத்தின் சொர்க்கமாக மாறிவருகிறது என குற்றச்சாட்டு.

                              ********

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி/ பாண்டிசேரி

இந்த புகைப்படத் தில் இருப்பவர் பெயர் அக்லக் சல்மானி. இவர் கையில் 786 என பச்சை குத்தி இருந்த காரணத்தால் அவரது வலது கையை அறுத்து எடுத்து விட்டனர். இது நடந்தது பா.ஜ.க.ஆளும் அரியானா பானிபட் நகரில்! அங்கு வேலை தேடி சென்றார் இந்த இளைஞர். இதுதான் மோடியின் புதிய இந்தியா.

                              ********

ரெட்ஃபிஷ் இதழ்:

வெனிசுலாவின் அயலுறவு அமைச்சகத்தின் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த  உடைந்த கண்ணாடியின் மிகப் பெரிய பிம்பம் முக்கியத்துவம் வாய்ந்தது. இது சிலியின் இடதுசாரி ஜனாதிபதி அலண்டே அவர்களை அமெரிக்க படைகளும் சிலியின் ராணுவமும் இணைந்து படுகொலை செய்த பொழுது உடைந்த அவரது கண்ணாடி!அமெரிக்க ஏகாதிபத்தியம் இன்றைக்கும் பேராபத்தாக உள்ளதை நினைவுபடுத்தும் விதமாக இந்தக் கண்ணாடியின் பிம்பம் வைக்கப்பட்டுள்ளது.

                              ********

பத்திரிகையாளர் ஆனந்த் கிரிஹரிதாஸ்:

அமேசான் முதலாளி ஜெஃப் பெஜோஸ் இந்த ஆண்டு அமெரிக்காவில் பிறந்த ஒவ்வொரு குழந்தைக்கும் 24 ஆயிரம் டாலர்கள் தந்தாலும் அதற்கு பிறகும் அவரது சொத்து கோவிட் தொற்றுக்கு முன்பு எவ்வளவு இருந்ததோ அதே அளவுக்கு இருக்கும். பிரச்சனை முடிந்தது. டாலர் பில்லியனர்கள் கோவிட் தொற்றை வென்றுவிட்டனர்.

                              ********

சூர்யா சேவியர்:

போஜ்புரி/ மைதிலி/ பிரஜ்பாஷா /புந்தேல்கண்டி/ பிரதாப்கர்/ அவதி/ கன்னோஜி/ கடுவாலி/ குமோனி/ ஹரியாணி/ ராஜஸ்தானி/ மார்வாரி/ மேவாரி/ மால்வி/ நிமதி/ பகேலி/ டோக்ரி/ பாடி/ லடாக்கி/ சட்டீஸ்கரி/ கோர்பா/ ஜார்கன்ஷி சந்த்தலி /
1800 ல் உருவான ஹிந்தியால் வடமாநிலத்தில் அழிந்து போன தாய்மொழிகள் இவை.

                              ********

ஸ்க்ரால் இதழில் ராம் மனோகர் ரெட்டி:

1943ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பினாங்க் (மலேசியா)லிருந்து 20  இளைஞர்கள் ரகசியமாக சென்னை வந்தனர். அவர்கள் நோக்கம் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராடுவது. அனைவரும் கைது.  ஒருவர்  அப்ரூவராக மாறினார். 19பேருக்கு எதிராக விசாரணை. இந்து-8பேர்/முஸ்லிம்-2/கிறித்தவர்-8/ சீக்கியர்-1 . என் தந்தையும் ஒருவர். 4 பேருக்கு சென்னை சிறையில் தூக்கு. இந்து-2 பேர்/முஸ்லிம்- 1/ சீக்கியர்-1. இதுதான்  பன் முகத்தன்மை! இதுதான் இந்தியா.

                              ********

டி.கே.ரெங்கராஜன், சிபிஎம் மத்தியக்குழு உறுப்பினர்

வேலை இழப்புகள் அதிகமாக உள்ள இந்த நிலையிலும், புதிய அரசு வேலைகளை உருவாக்க மத்திய அரசு தடை விதித்து முடிவு செய்துள்ளது. அரசு தன்னைச் சுருக்கிக் கொண்டு, இருக்கிற வாய்ப்புகளை தனியாருக்கு தாரை வார்க்க நினைக்கிறது. ஆபத்தாகவே முடியும்!

                              ********

கேரளா நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்:

செப்டம்பர் 8 - உலக கல்விதினம்.  96.2% கல்வி அறிவு பெற்று தேசிய அளவில் மீண்டும் கேரளா முதலிடம்.  இந்திய சராசரி 76.38%. கார்த்தியாயனி அம்மா 98  வயது.  தனது  மூத்த வயதில் கல்வி கற்றார். இப்பொழுதும் இணைய  வழி வகுப்புகளில் மணிக்கணக்கில் பங்கேற்கிறார்.  அக்சரம் யூடியூப் காணொலி கற்றல் இயக்கத்தின் புதிய அடையாளமாக உருவாகியுள்ளது.

                              ********

அஷோக் தவாலே, விவசாயிகள் சங்கத் தலைவர்:

2014ல் அம்பானி உலகில்  40வது பணக்காரராக இருந்தார். இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருந்தது.2020ல்  அம்பானி உலகில் நான்கா வது பணக்காரராக வளர்ந்தார். இந்தியபொருளாதாரம் மோசமாக மாறியது.  கடந்த ஆறு ஆண்டுகளாக   அம்பானியை  மேலும் பணக்காரராக ஆக்கவும் இந்தியர்களை ஏழைகளாக ஆக்கவும்  மோடி ஒரு  நாளைக்கு  18  மணி  நேரம் உழைத்தார்.

                              ********

மார்க்சிஸ்ட் கட்சி, மத்தியக்குழு:

வருங்கால வைப்பு நிதிக்கு 8.5%  வட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.  இதில் 8.15%   மட்டும் இப்பொழுது தரப்படும். மீதி 0.35% பங்கு சந்தை முதலீடு.  அதில் லாபம் வந்தால் பின்னர் தரப்படும். 0.35% ஒருவேளை தரப்படாவிட்டால் 1978க்கு பிறகு  இதுதான் 
மிக குறைந்த வட்டி விகிதம்.

                              ********

கேரளா நிதி அமைச்சர் தாமஸ் ஐசக்:

ஊரடங்கு முடிந்து அரசாங்கப்  பொருளாதார பணிகளை எப்படி தொடங்குவது?  இதோ கேரளாவின் பாதை!100 நாட்களில் 100 திட்டங்கள்.  மக்களுக்கு நிவாரணம்/ விவசாயிகளுக்கு நிதி உதவி/ சிறு குறு நடுத்தர தொழில்களுக்கு பாதுகாப்பு/ விவசாயம் அல்லாத துறைகளில் 50 ஆயிரம் வேலைவாய்ப்புகள்/ பெரிய உள்கட்டமைப்பு திட்டங்கள் பூர்த்தி செய்தல்  இவை  அனைத்தும்  அடங்கும். மொத்தம்  முதலீடு 25000 கோடி ரூபாய்.

                              ********

கொண்டல் சாமி:

தமிழர்கள் குறுகியவட்டத்திற்குள்ளேயே இருக்க விரும்புகிறார்கள். அதனால் தான் அவர்கள் தமிழைத்தாண்டி எதையும் படிக்க மறுக்கிறார்கள் - பிஜேபி ஆதரவாளர்கள். ‘யாதும் ஊரே யாவரும் கேளிர்’ என்று இன்றில்லை, 
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாடிய நாங்களா குறுகிய வட்டத்திற்குள் நிற்கிறோம்?

                              ********

பத்திரிகையாளர் சீமா சிஸ்டி:

கோவிட்  தொற்று நெருக்கடியில் ஊக்க நிதி உதவி என்ன செய்யமுடியும்? ஜெர்மனியின் உதாரணம்! உலகிலேயே மிக அதிக நிதியை ஜெர்மனி ஒதுக்கியது. ஒரு டிரில்லியன் யூரோ (62,64,000 கோடி ரூபாய்) நிதி நேரடி உதவியாகவும் கடனாகவும் கடனுக்கு உத்தரவாதம் தொகையாகவும் தரப்பட்டது. விளைவு என்ன? இன்று V வடிவத்திலான பொருளாதார மீட்சி ஏற்பட்டுள்ளது. மோடி செய்யத் தவறிய ஒன்று!

====தொகுப்பு: அ.அன்வர் உசேன்====