மும்பை, ஏப்.9-
மகாராஷ்டிர மாநிலம் துலே தொகுதி பாஜகஎம்எல்ஏ-வாக இருக்கும் அனில் அன்னா கோட்டே, பாஜகவிலிருந்து விலகியுள்ளார். அத்துடன் துலேமக்களவைத் தொகுதிபாஜக வேட்பாளரும், மத்திய பாதுகாப்புத்துறை இணையமைச்சருமான சுபாஷ் பாம்ரேவை எதிர்த்துப் போட்டியிடப் போவதாகவும் அதிரடியாக அறிவித்துள்ளார். இது பாஜக-வினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.