புதுதில்லி:
பஞ்சாப் மற்றும் மகாராஷ்டிரா கூட்டுறவு (பிஎம்சி) வங்கி நடவடிக்கை களை முடக்கி வைத்து, இந்திய ரிசர்வ்வங்கி எடுத்துள்ள நடவடிக்கை, அதன்வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்திய வங்கித்துறையிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்கள், அடுத்த ஆறு மாதங்களுக்கு தங்களது வங்கிக் கணக்கிலிருந்து அதிகபட்சம் ஆயிரம் ரூபாய்தான் எடுக்க முடியும் என்று, இந்திய ரிசர்வ் வங்கியால் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
பிஎம்சி வங்கியின் வராக்கடன் ரூ. 2ஆயிரத்து 500 கோடியை தாண்டிய பின்னணியிலேயே, ரிசர்வ் வங்கி இந்தநடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், பிஎம்சி வங்கியின்தற்போதைய நிலைக்கு, அதன் இயக்குநர்களாக இருக்கும் பாஜகவினர்தான் காரணம் என்றும், அவர்கள் தங்களுக்கு வேண்டியவர்களுக்கு கோடிக்கணக்கான ரூபாய் கடன்கொடுத்து, பிஎம்சி வங்கியையே சூறையாடி விட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பிஎம்சி வங்கியின் இணை இயக்குநராக இருப்பவர் ராஜ்நீத் சிங். இவர்பாஜக எம்எல்ஏ-வான சர்தார் தாரா சிங்கின் மகன் ஆவார். தாரா சிங்,முலுந்த் தொகுதியிலிருந்து நான்குமுறை எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப் பட்டவர். அவருக்கு 75 வயதான பின்னணியில் தற்போது ராஜ்நீத் சிங் முன்னிறுத்தப்பட்டு வருகிறார். அவரும் இதர-பாஜகவைச் சேர்ந்த வங்கி இயக்குநர்களும்தான் வங்கியை சூறையாடி விட்டார்கள் என்கிறார் காங்கிரஸ் தலைவர் சஞ்சய் நிருபம். போலியான தணிக்கை அறிக்கை அடிப்படையில், பிஎம்சி வங்கி நிர்வாகம்கடன் கொடுத்துள்ளதாகவும், இயக்குநர்களுக்கு தெரியாமல் இவ்வளவு பெரிய தொகை கடனாக வழங்கப்பட வாய்ப்பில்லை என்றும் சஞ்சய் நிருபம் குற்றம் சாட்டியுள்ளார்.