புதுதில்லி:
இந்தியாவின் முதல் முப்படைத்தலைமை தளபதியாக நியமிக்கப் பட்டுள்ள ஜெனரல் பிபின் ராவத் ஜனவரி 1 அன்று பதவியேற்கிறார். பாதுகாப்புத் துறையின் கீழ் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள பாது காப்பு விவகாரங்கள் துறையின் தலைவராகச் செயல்படும் முப்படைகளின் தலைமைத் தளபதி, நான்கு நட்சந்திர அந்தஸ்து பெற்றராணுவ ஜெனரலாக இருப்பார். ஓய்வு வயது 65 ஆக நிர்ண யிக்கப்பட்டுள்ளது. இவரது ஊதியம், மூன்று படை களின் தலைமைத் தளபதிகளுக்கு நிகராக இருக்கும். 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரையில், மூன்று ஆண்டுகளுக்கு அவர் இப்பதவியில் இருப்பார். பிபின் ராவத் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தியாவின் ராணுவ வலிமையை உயர்ந்த இடத்திற்கு கொண்டுசெல்ல திட்டமிட உள்ளதாக தெரிவித்தார்.