புதுதில்லி:
நாடு முழுவதும் இ- சிகரெட்டிற்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. மத்தியஅமைச்சரவை கூட்டம் புதனன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், நாடு முழுவதும் இ சிகரெட்டிற்கு தடைவிதிக்க முடிவு செய்யப்பட்டது. இ சிகரெட் உற்பத்தி, ஏற்றுமதி, விற்பனை, இறக்குமதிக்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. இ சிகரெட்டை தடை செய்வதற்கான அவசரசட்டம் 2019, சமீபத்தில் அமைச்சரவை குழுவால் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. பிரதமர்அலுவலகத்தின் உத்தரவின் பேரில் அமைச்சரவை குழு ஆய்வு மேற்கொண்டது. இந்த வரைவு அவசரச் சட்டத்தில், இ சிகரெட் தடையைமுதல் முறை மீறுபவர் களுக்கு அதிகபட்சம் ஒருஆண்டு சிறை தண்டனையும் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் என்று தெரி விக்கப்பட்டுள்ளது.