tamilnadu

img

விமான நிலையங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதைக் கைவிடுக!

புதுதில்லி, ஜூன் 24- விமான நிலையங்களைத்தனி யாருக்குத் தாரை வார்த்திட மத்திய அரசு முடிவெடுத்திருப்பதைக் கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி நாடாளுமன்ற உறுப் பினர் கே.கே.ராகேஷ் கோரினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. மாநிலங்களவையில் திங்கள் கிழமை அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் கே.கே.ராகேஷ் பேசியதாவது: மத்திய அரசு நாட்டிலுள்ள ஆறு விமான நிலையங்களைத் தனியாரிடம் தாரை வார்த்திட முடிவெடுத்திருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொள்கிறேன். ஏற்கனவே அரசு ஐந்து விமான நிலையங்களை அதானி குழுமத்திற்கு ஒப்படைத்திட முடிவெடுத்திருக்கிறது. இந்திய விமானநிலைய ஆணையம் (ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா) இதனை எதிர்க்கிறது. அங்கே பணியாற்றும் ஊழியர்கள் இதனை எதிர்க்கிறார்கள். பல்வேறு மாநில அரசுகளும் எதிர்க்கின்றன. எனினும் அவற்றை அதானி வசம் ஒப்படைத்திட மத்திய அரசு தீர்மானித்திருக்கிறது. மத்திய அரசு தயாரில்லை இவ்வாறு மத்திய அரசு முடிவெடுத்திருப்ப தாகத் தெரிந்தவுடனேயே கேரள மாநில அரசு திருவனந்தபுரம் விமான நிலையத்தை தாங்கள் ஏற்று நடத்துவதாக தங்கள் விருப்பத்தினைத் தெரிவித்திருந்தது. எனினும் டெண்டரில் பங்கேற்குமாறு மத்திய அரசு, கேரள அரசைக் கேட்டுக் கொண்டிருக்கிறது. இதன்மூலம் அதானியையும், கேரள அரசையும் சமமாகப் பாவிக்கிறது. மேற்படி விமான நிலையம் கேரள அரசு வழங்கிய நிலத்தில்  நிறுவப்பட்டிருக்கிறது. ஆனாலும் அதை யெல்லாம் பரிசீலித்திட மத்திய அரசு தயாரா யில்லை. இது தொடர்பாக கேரள முதல்வர் பிரதமரைச் சந்தித்தார். லாபமீட்டும் நிலையம் இவ்வாறு தனியாரிடம் தாரை வார்த்திட திட்டமிட்டுள்ள ஆறு விமான நிலையங்களும் நாட்டின் செல்வங்கள். இவற்றைத் தனியாரிடம் தரக் கூடாது. இவற்றை அதானி குழுமத்திடம் ஒப்படைத்திட இந்த அரசு துடிப்பதற்கான காரணத்தை என்னால் புரிந்துகொள்ள முடிய வில்லை. திருவனந்தபுரம் விமான நிலையம் லாபம் ஈட்டும் விமான நிலையமாகும். இதனை ஏன் அதானி குழுமத்திடம் ஒப்படைக்க வேண்டும்? மத்திய அரசு தன் முடிவை மாற்றிக் கொள்ள வேண்டும். இவ்வாறு கே.கே.ராகேஷ் கூறினார். (ந.நி.)