கே.கே.ராகேஷ் வலியுறுத்தல்
புதுதில்லி, நவ.30- பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்த்த் தொழிலாளர்களுக்கு கடந்த பத்து மாதங்களாக ஊதி யம் வழங்கப்படவில்லை. மத்திய அரசு இதில் உடனடி யாகத் தலையிட்டு அவர்களுக்கு ஊதியம் வழங்கிட நட வடிக்கைகள் எடுத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் கே.கே. ராகேஷ் வலியுறுத்தினார். நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத்தொடர் நடை பெற்று வருகிறது. மாநிலங்களவையில் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்சனைகளை எழுப்பும் நேரத்தில் கே.கே.ராகேஷ் பேசியதாவது:
பிஎஸ்என்எல் நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு, கடந்த பத்து மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை. சென்ற மாதம், கேரளாவில், ஊதியம் இல்லாத காரணத்தால் இரு ஊழியர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். தற்காலிக ஒப்பந்தத் தொழிலா ளர்களின் அவலநிலையைக் காண மத்திய அரசு முன்வர வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உண்மையில், பிஎஸ்என்எல் நிறுவனம் தன் ஒப்பந்தக்காரர்களுக்கு அளிக்க வேண்டிய தொகையை அளிக்கவில்லை. அத னைத் தடர்ந்து அவர்கள் தங்களின்கீழ் பணியாற்றும் ஊழி யர்களுக்கு ஊதியத்தை அளிக்கவில்லை. இதன் பொருள், நிரந்தர ஊழியர்கள், சுய ஓய்வுக்குத் தள்ளப்பட்டிரு க்கிறார்கள். ஒரு லட்சம் இடங்கள் ஏற்கனவே காலியாக இருக்கின்றன. பிஎஸ்என்எல் நிறுவனம் உருவானதிலி ருந்தே ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒப்பந்த அடிப்படையில் அற்ப ஊதியத்தில் பணி செய்து வரு கிறார்கள். அந்த ஊதியமும் இப்போது அவர்களுக்கு வழங்கப்படவில்லை. மத்திய அரசு இதில் உடனடியாகத் தலையிட்டு அவர்கள் அனைவருக்கும் ஊதியம் வழங்கிட நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கே.கே.ராகேஷ் கேட்டுக் கொண்டார். (ந.நி.)