tamilnadu

ஆதித்யநாத் மீது புகார் அளித்த கடற்படை முன்னாள் தளபதி

புதுதில்லி, ஏப்.4- இந்திய ராணுவத்தை, ‘மோடியின் சேனை’ என்று கொச்சைப்படுத்திய, உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், “கடற்படை முன்னாள் தலைமைத் தளபதி என்ற முறையில்- ஆதித்யநாத்தின் கருத்தால்-நான் மட்டுமல்ல, இந்திய ராணுவத்தில்சேவையாற்றிய பலரும் புண்பட்டுள்ளனர். இந்திய ராணுவம் என்பது நாட்டுக்கானது. எந்தவொரு தனிமனிதருக்கும் சொந்தமானது அல்ல; இந்திய அரசியல் சாசனத்திற்கு மட்டுமே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்.தேர்தல் முடியும்வரை, தலைமைத் தேர்தல் ஆணையர்தான் உச்ச அதிகாரம் படைத்தவர் என்பதால், ஆதித்யநாத்தின் பேச்சு குறித்து தற்போது புகார் அளித்துள்ளேன்” என்று ராம்தாஸ் குறிப்பிட்டுள்ளார்.