tamilnadu

img

‘ஆவிகள்’ குறித்து 6 மாத சான்றிதழ் படிப்பு... வாரணாசி இந்து பல்கலை ஏற்பாடு

வாரணாசி:
வாரணாசி இந்துப் பல்கலைக்கழகமானது, ‘ஆவிகள்’குறித்த 6 மாத சான்றிதழ் படிப்பை வழங்க திட்டமிட்டுள்ளது.வாரணாசி பல்கலைக்கழகத்தில், ஆயுர்வேதத் துறையில் 8 கல்விப் பிரிவுகள் உள்ளன. அவற்றில் ஒன்றாக ‘ஆவிகள்’ குறித்த படிப்பை, வாரணாசி இந்துப் பல்கலைக்கழகம் கொண்டு வந்துள்ளது.ஆவிகளால் மனிதர்களுக்குப் பலவித உடல் மற்றும் மனநோய்கள் ஏற்படுவதாக, சர்வதேச ஆயுர்வேத ஆராய்ச்சி(!) மையம் விளக்கம் ஒன்றை வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. “ஆவிகள் விஞ்ஞானம்(!) என்பது ஆயுர்வேதத்தின் ஒரு பகுதிஆகும். தேவர்கள், தேவதைகள், கந்தர்வர்கள், யட்சர்கள், ராட்சசர்கள், பூதங்கள், பிசாசுகள், நாகங்கள் மூலம் பல நோய்கள் உண்டாகும். அவற்றை சாந்திபாதம், பலிபிரதானம், ஹவனம்உள்ளிட்டவை மூலம் குணப்படுத்தலாம்” என்றும் அந்த சர்வதேச அமைப்பு தெரிவித்துள்ளதாக கூறும் வாரணாசி பல்கலைக்கழகம், அதனடிப்படையிலேயே ஆவிகள் குறித்த 6 மாதச்சான்றிதழ் படிப்பை கொண்டுவந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

ஆயுர்வேதத் துறையின் தலைவர் யாமினி பூஷன் திரிபாதியும், “ஆவி விஞ்ஞானம் என்பதுஎங்கள் துறையின் எட்டுப்பிரிவுகளில் முக்கியான ஒன்றாக விளங்கும்; இந்த கல்வியானது ஆவிகள் தொடர்பான உடல்நலக்கோளாறு மற்றும் மனப் பிறழ்வுகளுக்குச் சிகிச்சை அளிப்பது குறித்த கல்வியாகும்” என்று கூறியுள்ளார்.ஆவிகள் குறித்த இந்த படிப்பு 2020 ஜனவரி முதல் துவங்கப்படுகிறது.