tamilnadu

img

மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு 5  போலீசார் பலி 

மும்பை 
நாட்டில் கொரோனவால் அதிக சேதாரத்தைச் சந்தித்துள்ள மாநிலமான மகாராஷ்டிராவில் இதுவரை 16 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 651 பேர் பலியாகியுள்ள நிலையில், 3 ஆயிரத்து 94 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 1 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா அறிகுறி உள்ள டெஸ்ட்கள் கையிருப்பில் உள்ளதால் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.  

இந்நிலையில் சோலாப்பூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த உதவி ஆணையர் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார். இதன்மூலம் மகாராஷ்டிராவில் கொரோனாவால் பலியான போலீசார்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.