tamilnadu

img

மகாராஷ்டிராவில் பாம்பை கொல்ல வைத்த தீயில் சிக்கி 5 சிறுத்தை குட்டிகள் பலி

மகாராஷ்டிராவில் விவசாய பண்ணை ஒன்றில் பாம்பை கொல்ல வைத்த தீயில் சிக்கி 5 சிறுத்தை குட்டிகள் பலியாகி சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


மகாராஷ்டிரா மாநிலம் பூனேவில் உள்ள அவசரி கிராமத்தில் கரும்பு விவசாய பண்ணை ஒன்றில் அறுவடை செய்வதற்காக குப்பைகளை நீக்கும் பணியை அங்கு வேலை செய்த தொழிலாளர்கள் செய்துள்ளனர். அப்போது தொழிலாளர்கள் பாம்பு ஒன்று குப்பையினுள் நுழைவதை கண்டதால் அதை கொல்லை குப்பைக்கு தீ வைத்துள்ளனர். அந்த தீயில் குப்பை கூளங்களினுள் இருந்த 5 சிறுத்தைக் குட்டிகள் உடல் கருகி உயிரிழந்தன. சிறுத்தைக் குட்டிகள் இருந்தது தெரியாமல் போனதே அவை இறந்ததற்கு காரணம் என்பதை அங்கு இருந்த தொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.


இதைத்தொடர்ந்து வனத்துறைக்கு அளிக்கப்பட்ட தகவலையடுத்து வனத்துறை அதிகாரிகள் அங்கு ஆய்வு நடத்தினர். பின்பு பிரேத பரிசோதனை நடத்தப்பட்டு சிறுத்தைக் குட்டிகளின் இறப்பு உறுதி செய்யப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.