புதுதில்லி:
உத்தரப்பிரதேசத்தில் 3 ஆயிரம் டன்அளவுக்கு தங்கப் படிமம் கண்டுப்பிடிக்கப்பட்டதாக வெளியான தகவல் உண்மையில்லை என்று இந்திய புவியியல் ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.சோன்பத்ரா மாவட்டத்தில் பூமிக்கு அடியில் 3,350 டன் அளவிலான தங்க படிமங்கள் உள்ளதாக சமீபத்தில் செய்தி வெளியானது. இதுகுறித்து இந்திய புவியியல் ஆய்வு மைய இயக்குநரகம் அளித்துள்ள விளக்கத்தில், அந்த தகவலுக்கும் தங்களுக்கும் எவ்வித தொடர்புமில்லை. சோன்பத்ரா மாவட்டத்தில் இதுபோல் பெரியஅளவு தங்கம் இருப்பதாக புவியியல் ஆய்வு மதிப்பிடவும் இல்லை. தங்கம் இருப்பு குறித்து பல ஆய்வுகள் நடத்தியுள்ளோம். ஆனாலும் அதன் முடிவுகள் சோன்பத்ராவில் இந்த அளவு தங்கம் இருப்பதை உறுதி செய்யவில்லை. 1998-99மற்றும் 1999-2000 ஆண்டுகளில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் புவியியல் ஆய்வுஇயக்குனரகத்துக்கு அனுப்பப்பட்டுள் ளது.அந்த அறிக்கையில், சோன்பத்ரா மாவட்டத்தில் 52,806.25 டன் தாது இருப்பதாக தெரியவந்துள்ளது. ஒரு டன் தாதுப்பொருளில் சராசரியாக 3.03 கிராம் தங்கம்கிடைக்கும். அதன்படி அங்குள்ள தாதுப்பொருளில் சுமார் 160 கிலோ தங்கம்தான்கிடைக்கும், ஊடகங்களில் வெளியானதுபோல 3,350 டன் அல்ல என்று தெரிவித்துள்ளது.