கனமழையால் நேபாளத்தில் நிலச்சரிவு - 12 பேர் பலி
நேபாளத்தில் பெய்த கனமழையால் 2 கிராமங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலச்சரிவில் 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய சீன எல்லையான திபெத்துக்கு உட்பட்ட காத்மண்டு பகுதியில் பாரபைஸ் கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 10 பேர் இறந்ததாக நேபாள அரசு அதிகாரி முராரி வஸ்தி தெரிவித்துள்ளார். வடமேற்கு பகுதி, பக்லங் கிராமத்தைச் சேர்ந்த 2 பேர் நிலச்சரிவில் உயிரிழந்துள்ளனர்.
இரண்டு கிராமங்களிலுமே திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் மக்களால் தப்பித்துச் செல்ல முடியவில்லை. அதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியவில்லை என அதிகாரிகள் தலைப்பில் கூறப்பட்டுள்ளது. மேலும், மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஜூன் முதல் செப்டம்பரில் மாதம் வரை தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக ஏற்பட்ட நிலச்சரிவால் இதுவரை 111 பேர் காணாமல் போயுள்ளனர். 160 பேர் காயமடைந்துள்ளனர்.