tamilnadu

நாமக்கல் சுய உதவிக்குழு குடும்பங்களுக்கு சிறப்புநிதி உதவி

நாமக்கல், ஜூன் 14- தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கோவிட்-19 சிறப்புநிதி உதவித் தொகுப் பின் மூலம் செப்டம்பர் மாதத்திற்குள் நிதி உதவி வழங்கப்பட உள்ளது என மின்சா ரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தகவல் தெரி வித்துள்ளார். இதுகுறித்து அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்ததாவது, ஊரக புத்தாக்கத் திட் டத்தின் மூலம் நாமக்கல் மாவட்டத்தில் நீண்டகால தனிநபர் தொழில் கடனாக நபர் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் வீதம் 696 நபர்களுக்கு ரூ. 3.48 கோடி ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்புகள் மூலம் கடனாக வழங்கப்படும். ஒருமுறை மூலதன நிதியாக உற்பத்தியாளர் குழு ஒன் றுக்கு ரூபாய் 1.50 லட்சம் வீதம் 35 உற்பத் தியாளர் குழுக்களுக்கு ரூ. 52.50 லட்சம் ஊராட்சி அளவிலான குழு கூட்டமைப்பு கள் மூலம் வழங்கப்படும். மேலும், நாமக்கல் மாவட்டத்தில் தமிழ் நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் கோவிட் -19 சிறப்புநிதி உதவித் தொகுப்பின் மூலம் செப்டம்பர் மாதத்திற்குள் 7 ஆயிரத்து  99 சுய உதவிக்குழு குடும்பங்களுக்கு ரூ.7 கோடியே 8 லட்சத்து 25 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.