tamilnadu

மணல் கடத்தலில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது

நாமக்கல், மே 19-மணல் கடத்தலில் ஈடுபட்ட நபர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.கடந்த ஏப்ரல்-28 ம் தேதி காலை 6 மணியளவில் வேலூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கூடுதுறை காவிரி ஆற்று படுகையில் அரசு அனுமதியின்றி சிலர் இரண்டு ஜேசிபி இயந்திரங்கள் மூலம்இரண்டு லாரிகளில் மணல் அள்ளிக் கொண்டிருப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இத்தகவலின் பேரில் வேலூர் காவல் நிலைய காவல் சிறப்பு உதவி ஆய்வாளர் ரவிக்குமார் அங்கு சென்று பார்த்தபோது மோகனூர் பாலப்பட்டியைச்சேர்ந்த வீரமலை மகன் வேலுசாமி (49) என்பவர் தலைமையில், மணி, சஞ்சய் காந்தி, கோவிந்தராஜ், சரவணன் ஆகியோர் மணல் திருட்டில் ஈடுபட்டிருந்தனர். சிறப்பு உதவி ஆய்வாளர் தலைமையிலான காவல்துறையினர் வேலுசாமி கைது செய்தனர். இவர் மீது 2018-ம் ஆண்டில் மோகனூர் காவல் நிலையத்தில் ஒரு வழக்கும், 2019-ல் பரமத்தி காவல் நிலையத்தில் இரண்டு மணல் கடத்தல் வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, மணல் திருட்டு வழக்கில் தொடர்ந்து ஈடுபட்டு கைது செய்யப்பட்ட வேலுசாமியை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ்சிறையில் அடைக்க பரிந்துரை செய்தார். இதன் அடிப்படையில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வேலுசாமியை குண்டர் சட்டத்தில் சிறையில்அடைக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்துவேலுசாமி நாமக்கல் கிளை சிறையில் இருந்து சேலம்மத்திய சிறைச்சாலைக்கு கொண்டு செல்லப்பட்டார்.