நாமக்கல், ஜன.25- நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே வடகம் ஊராட்சியில் தண்ணீர் விற்பனையில் ஈடுபட்ட தனியார் லாரியை பொதுமக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடு பட்டனர். நாமக்கல் மாவட்டம், வடகம் ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இக்குடும்பங்களுக்கு கடந்த ஒரு வருடமாக குடிநீர் முறையாக வழங் கப்படவில்லை. இதனால் இவர்கள் குடிநீர் பற்றாக்குறையால் சிரமப் பட்டு வந்தனர். இந்நிலையில், இப் பகுதியை சேர்ந்த தனியார் நிலத்தில் ஐந்து ஆழ்துளை கிணறுகள் அமைத்து லாரிகள் மூலம் குடிநீர் விற்பனை செய்யப்பட்டு வந்தன. இதுகுறித்து பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பொது மக்கள் குடிநீரை விலைக்கு வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இந்நிலையில் ராசிபுரத்தி லிருந்து புதுப்பட்டி வழியாக செல்லும் தண்ணீர் லாரியை இப் பகுதி மக்கள் சிறை பிடித்து போராட் டத்தில் ஈடுபட்டனர். இத்தகவ லறிந்த நாமகிரிப்பேட்டை போலீ சார் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். ஆனால் பொதுமக்கள் சம்பந் தப்பட்ட துறை அதிகாரிகள் வந் தால் மட்டுமே போராட்டத்தை விலக்கிக் கொள்வதாக கூறினர். தொடர்ந்து பேச்சுவார்த்தையில் குடிநீர் பிரச்சனை குறித்து அதிகாரிகளிடம் தெரிவிப்ப தாகவும், அதன் மீது நடவடிக்கை எடுக்க அதிகாரிகளிடம் வலியுறுத் தப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர். இந்த சிறை பிடிப்பு நடவடிக்கையால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.