tamilnadu

சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வு பொதுமக்களுக்கு ஆட்சியர் வேண்டுகோள்

நாமக்கல், செப்.21- சட்டமன்ற மனுக்கள் குழு ஆய்வுக்கு விரைவில் வர உள்ள நிலையில், பொது மக்கள் தங்கள் குறைகள் மற்றும் கோரிக் கைகளை மனுக்களாக அளிக்குமாறு நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரி யம்  வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழ் நாடு சட்டமன்றப் பேரவையின் 2018 - 2020 ஆம் ஆண்டுகளுக்கான மனுக்கள் குழு நாமக்கல் மாவட்டத்திற்கு விரைவில் வருகை தர உள்ளது. இதனையொட்டி நாமக்கல் மாவட்ட எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள தனிப்பட்ட நபரோ, சங் கங்கள் அல்லது நிறுவனங்களோ தீர்க்கப் பட வேண்டிய பொது பிரச்சனைகள், குறை கள் குறித்த மனுக்களை அளிக்கலாம். இம் மனுக்களில் (5 நகல்கள் தமிழில்  மட்டும்) மனுதாரர்கள் தேதியுடன் கையொப்ப மிட்டு, தலைவர் மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை சென்னை-600 009 என்ற முகவரிக்கு அக்டோபர் 18 ஆம் தேதிக்குள் அனுப்பவேண்டும்.  இம்மனுக்களில் பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாமல் இருக்கும் பொது பிரச்சனைகள் குறித்த தாக இருக்கலாம். மனுக்கள் ஒரே ஒரு பிரச்சனையை உள்ளடக்கியதாகவும், ஒரே  ஒரு துறையை சார்ந்ததாகவும் இருத்தல் வேண்டும். மனுக்கள் பொது முக்கியத்து வம் வாய்ந்த பொருள் ஒன்றினை உள்ள டக்கியதாக இருத்தல் வேண்டும்.        மேலும் சட்டமன்ற பேரவை விதிகளின் வரம்பிற்குட்பட்ட மனுக்களை மட்டுமே ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளும். ஒரே மனு தாரர் பல மனுக்களை அனுப்பி இருந்தா லும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதும் ஒரு மனுவை மட்டுமே குழுவினால் ஆய் விற்கு எடுத்துக் கொள்ளப்படும். அவ்வ மயம் மனுதாரர் முன்னிலையில் குழு கூட் டத்தில் கலந்துகொள்ளும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் மனுவில் உள்ள பொருள் குறித்த உண்மை நிலவரம் கேட்டறியப்ப டும். இதுகுறித்து மனுதாரர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து குழு ஆய்வு செய்யும் நாளில் தகவல் தனி யாக அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சி யர் தெரிவித்துள்ளார்.