tamilnadu

img

குமரி மாவட்ட கோயில் முறைகேடுகள்.... அதிமுக ஆட்சியில் கிடப்பில் போடப்பட்ட வழக்கில் அதிகாரி மீது எப்ஐஆர் பதிவு... சட்டவிரோத செயல்பாடுகளால் சொத்துக்களை குவித்தவர்....

நாகர்கோவில்:
கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில் களில் நடந்த முறைகேடுகள் மூலம் வருவாய்க்கு அதிகமான சொத்து சேர்த்த முன்னாள்இணை ஆணையர் மீது லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

அதிமுக ஆட்சியின்போது எழுந்த புகார்களின் பேரில் நடந்த விசாரணை அரசியல் தலையீடுகளால் கிடப்பில்போடப்பட்டு இப்போது மீண்டும் சூடுபிடித் துள்ளது.கன்னியாகுமரி மாவட்ட திருக்கோயில்கள் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணியாற்றியவர் எம்.அன்புமணி. 2017முதல் 2021 வரை இந்த பொறுப்பில் இருந்தபோது இவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்தன.லஞ்சம் ஊழல் மட்டுமல்லாது பாலியல் புகார்களும் உள்ளன. இந்து சமய அறநிலையத் துறைக்கும் இந்த புகார்கள் சென்றன. அதன்படி வருமானத்துக்கு அதிகமாக பத்மநாபபுரம் பகுதியில் இரண்டு சொத்துகள் வாங்கியது தொடர்பாக ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை நடத்தினர். குற்றம் கண்டறியப்பட்டது. ஆனால், அரசியல் தலையீடுகளால் நடவடிக்கை இன்றி கிடப்பில் போடப்பட்டது.இந்நிலையில் தற்போது, வருமானத்துக்கு அதிகமான சொத்து சேர்த்ததாக அம்புமணி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்துசமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகம் அனுப்பியுள்ள அறிக்கையைத் தொடர்ந்து குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல் ஆய்வாளர்ரெமா வழக்கு பதிவு செய்து முதல் தகவல்அறிக்கை அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள் ளதாவது:

குமரி மாவட்ட திருக்கோயில்கள் சுசீந்திரம்இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக எம்.அன்புமணி 15.9.2017 முதல் 11.3.2021வரை பணியாற்றியுள்ளார். தற்போது தூத்துக் குடி மற்றும் தென்காசி மாவட்டங்களுக்கு மண்டல இணை ஆணையராக பணியாற்றி வருகிறார். இவரது சொந்த ஊர் திருச்சி மாவட்டம் உறையூர் ஆகும். நடுத்தர குடும்பத்தை சேர்ந்தவர். இவர் தனது சட்டப்படிப்பை முடித்துவழக்குரைஞராக பணியாற்றி வந்தார். இவர் 28.4.1999 இல் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறையில் உதவி ஆணையராக பணியில் சேர்ந்தார்.

அன்புமணி குமரி மாவட்ட திருக்கோயில் கள் இணை ஆணையர் மற்றும் செயல் அலுவலராக பணியாற்றிய 15.9.2017 முதல் 11.2.2021வரையிலான காலகட்டத்தில் சட்டவிரோத செயல்பாடுகள் காரணமாக வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்து தன்னை வளப் படுத்திக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து1.10.2017 முதல் 31.12.2019 வரையிலான அவரதுபணிக்காலத்தில் அவரது சொத்து விவரங்கள் அனைத்தும் முழுமையாக ஆய்வுக்கு உட் படுத்தப்பட்டது. இதில் அன்புமணி ரூ.40 லட்சத்து 90 ஆயிரத்து 734 மதிப்பில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் வருமானத்துக்கு அதிகமாக பணிக்காலத்தில் சொத்து சேர்த்திருப்பதாக அன்புமணி மீதுஇரண்டு பிரிவுகளில் ஜுலை 5 ஆம் தேதி வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது என முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ்பெற்றகுமார கோவில் அருகில் உள்ள குளத்தைஒட்டி அன்புமணி வாங்கிய கட்டிடத்தையும்புதிய கட்டுமானத்தையும் அறநிலையத்துறையிலிருந்து ஓய்வு பெற்ற இருவர் பராமரித்து வருகிறார்கள். அன்புமணியின் சொத்துகளை பத்மநாபபுரம் தொகுதி கண்காணிப்பாளர் (பொறுப்பு) சிவகுமார் என்பவர் கண்காணித்து வருவதாக கூறப்படுகிறது.மதுரை காமராஜர் பல்கலைக் கழகம் மற்றும் தமிழக ஆளுநருடன் இணைத்து பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான நிர்மலாதேவிக்கும் அன்புமணிக்கும் இருந்த நெருங்கியதொடர்பு ஏற்கனவே அம்பலமாகி உள்ளது. அதுகுறித்து சிபிசிஐடி விசாரணையில் அன்புமணி அளித்த வாக்குமூலத்தில் நிர்மலா தேவியுடன் கூட்டாக 3 லட்சத்து 88 ஆயிரம் செலுத்திவங்கி கணக்கு தொடங்கியதை ஒப்புக் கொண்டுள்ளார் (நக்கீரன் 2018 ஜுன் 16-19). இந்துசமய அறநிலையத்துறை நடத்தும் கல்லூரிகளில் அன்புமணியின் தொடர்புகள் குறித்தும் நக்கீரன் கட்டுரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் கோயில்களில் நடந்துள்ள மராமத்து குறித்து தணிக்கை செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அன்புமணி போன்றவர்களுக்கான ஊழல் பணத்தின்ஊற்று இதில் அடங்கியுள்ளதாக ஆலய ஊழியர்கள் தெரிவிக்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள 490 திருக்கோவில்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பில் இருந்த அன்புமணி பல வழிகளில் ஊழல் செய்து வாங்கியசொத்துகள் குறித்து மட்டுமல்லாது ஒட்டுமொத்த முறைகேடுகளையும் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரிக்க வேண் டும். குற்றவாளிகளை சட்டத்தின் முன்பு நிறுத்தவேண்டும் என்பது ஊழியர்கள் மற்றும் பொதுமக்களது கோரிக்கையாகும்.