நாகப்பட்டினம், பிப்.18- மாநில உணவுப் பாதுகாப்பு அலுவலர் சங்க மாநிலப் பொதுச் செயலாளரும், அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளரும் நாகப்பட்டி னம் நகராட்சியின் உணவுப் பாது காப்பு அலுவலருமான அ.தி.அன்பழ கன், அனைத்துத் துறைச் சங்கங்களை யும் அரவணைத்து, நாகப்பட்டினத் தில் உணப்புப் பாதுகாப்புத் துறைக்கு ஒரு முகவரி தந்து, எவ்விதக் குறைபாடும் இல்லாமல் பணியாற்றி வந்தவர். இந்நிலையில், காழ்ப்புணர்ச்சியோ டும், பழிவாங்கும் நோக்கத்தோடும் 17.02.2020 அன்று, உணவுப் பாதுப்புத் துறையிலிருந்து முன்னாள் தாய்த் துறைக்கு, அதாவது, சுகாதார ஆய் வாளராகப் பணிமாற்றம் செய்து, ஆணை வழங்கப் பட்டுள்ளார். இதனைக் கண் டித்து, மீண்டும் உணவுப் பாதுகாப்புத் துறைக்கே அவரைப் பணியாற்றிட ஆணை பிறப்பிக்குமாறும் மாவட்டம் முழுவதும் அரசு ஊழியர் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் செவ் வாய்க்கிழமை நடைபெற்றது. உணவுப் பாதுகாப்புத் துறை, சென்னை அலுவ லகத்தின் முன்பு புதன்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. நாகப்பட்டினம், ஆட்சியர் அலுவ லகம் முன்பு, நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் து.இளவரசன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டப் பொருளாளர் ப.அந்து வன்சேரல், நாகை வட்டச் செயலாளர் எம்.தமிழ்வாணன், சி.ஐ.டி.யு. மாவட்டச் செயலாளர் சீனி.மணி, சத்துணவு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் தேன் மொழி, ஊரக வளர்ச்சித் துறை ஊழியர் சங்கம் சார்பில் எஸ்.ஜோதிமணி, அனை த்துத் துறை ஓய்வூதியர் சங்க மாவட்டச் செயலாளர் சொ.கிருஷ்ணமூர்த்தி, வருவாய்த் துறை அலுவலர் சங்கம் சார்பில் பால்ராஜ் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். தமிழ்நாடு கூட்டுறவுத் துறை ஊழி யர் சங்கத்தின் மாநிலத் தலைவர் எம்.செளந்தரராஜன் நிறைவுரையாற் றினார். தமிழ்நாடு கிராம சுகாதார செவி லியர் சங்கத்தின் மாநிலப் பொதுச் செய லாளர் பா.இராணி நன்றி கூறினார்.