நாகப்பட்டினம், ஜூலை 1- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர்கள் சங்கம், மாநில மையம், தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்க ளுக்கும் மாவட்ட வாரியாக, கொரோனா ஊரடங்கு கார ணமாக, வாழ்வாதாரம் பாதி க்கப்பட்டு, நலிவுற்ற கலை ஞர்களுக்கு நிதியுதவி அளி த்து வருகிறது. இதன் அடி ப்படையில், நாகப்பட்டினம் மாவட்டம் (மயிலாடுதுறைப் பகுதி உட்பட) தமுஎகச மா வட்ட மையத்திற்கு ரூ.20,000 வழங்கப்பட்டது. நாகை மாவட்ட(தெற்கு) தமுஎகச கிளைகளைச் சே ர்ந்த நலிந்த 10 கலைஞர்கள், மயிலாடுதுறைப் பகுதி தமு எகச கிளைகளைச் சேர்ந்த 10 கலைஞர்கள் என கூடுதல் 20 கலைஞர்களுக்குத் தலா ரூ. 1000 என நிதியுதவி வழங்க ப்பட்டது. நாகை, அரசு ஊழி யர் சங்கக் கட்டிடத்தில் நடை பெற்ற நிகழ்வில் தமுஎகச மாவட்டத் தலைவர் ந.காவி யன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். மயிலாடுதுறை ஆர்.ஓ.ஏ. கட்டிடத்தில் நடைபெற்ற நிதி யளிப்பு நிகழ்வில் தமுஎ கச மாவட்டச் செயலாளர் ப. பாலசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.