தரங்கம்பாடி, செப்.21- சர்வதேச கடற்கரை தூய்மை தினத்தையொட்டி நாகை மாவட்டம் பொறையார் த.பே.மா.லு கல்லூரியின் தொண்டு அமைப்புகள் சார்பில் தரங்கம்பாடி கடற்கரையை தூய்மைப்படுத்தும் பணி சனியன்று நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ் தலைமையில் நடைபெற்ற பணியினை தரங்கம்பாடி வட்ட வழங்கல் அலுவலர் பிரான்சுவா துவக்கி வைத்தார். 100-க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கடற்கரை பகுதியில் கிடந்த சுமார் 2 டன் எடையுள்ள குப்பைகளை சேகரித்து அகற்றி தரங்கம்பாடி பேரூராட்சியிடம் ஒப்படைத்தனர். துணை முதல்வர் ஜோயல் எட்வின்ராஜ், நாட்டு நலப்பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் .செல்வராஜ், திட்ட அலுவலர் ஜோசப் பன்னீர்தாஸ், தேசிய மாணவர் படை சார்பில் பேராசிரியர் கோபிநாத், இளைஞர் செஞ்சிலுவை சங்கம் சார்பில் பேராசிரியர் நெல்சன் அமிர்தராஜ்,செஞ்சுருள் சங்கம் சார்பில் ஜான் டேவிட் எபினேசர்,பல்நோக்கு சேவை சங்கம் சார்பில் முனைவர் இராஜேந்திரன், மாணவர் எக்ஸ்னோரா சங்கம் சார்பில் முனைவர் ஜோதிபாஸ் ஆகியோர் உடனிருந்தனர்.