நாகப்பட்டினம், ஜூன் 21- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம், நாகை மாவட்ட மையம் சார்பில், ‘கொரோனாவிடமி ருந்து மக்களைப் பாதுகாப்போம்; நம்மையும் பாதுகாத்துக் கொள் வோம்’ எனும் உறுதியேற்புக் கூட் டம், சனிக்கிழமை சங்க மாவட்டத் தலைவர் து.இளவரசன் தலை மையில் நடைபெற்றது. சமீபத்தில் உயிர் நீத்த விவ சாய தொழிலாளர் சங்கத் தலை வர் கே.வரதராஜன், 20 ராணுவ வீரர்கள் மற்றும் கொரோனா வால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த செவிலியர்கள் பிரிசில்லா, தங்கலெட்சுமி, ஆய்வக நுட்ப னர் தீனதயாளன், வருவாய்த் துறை ஊழியர் சேகர், காவல் ஆய் வாளர் பாலமுரளி, முதலமைச் சர் அலுவலகச் செயலாளர் தாமோ தரன் உள்ளிட்டோருக்கான அஞ் சலி தீர்மானத்தை வட்டச் செயலா ளர் எம்.தமிழ்வாணன் வாசித்த தும், இரு நிமிட மௌன அஞ்சலி கடைபிடிக்கப்பட்டது.
வட்டத் துணைத் தலைவர் சி.வாசு வர வேற்புரையாற்றினார். அரசுத் தலைமை மருத்துவ மனைக் கண்காணிப்பாளர் (பொ) ஏ.மொகிதீன் அப்துல் காதர் மற்றும் நிலைய மருத்துவ அலு வலர் எஸ்.எம்.முருகப்பன் ஆகி யோர் கருத்துரையாற்றினர். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலா ளர் அ.தி.அன்பழகன் சிறப்புரை யாற்றினார். நாகை மருத்துவக் கல்லூரி முதல்வர் வி.விஸ்வ நாதன் நிறைவுரைற்றினார். அரசு செவிலியர் சங்க மாவட்டத் தலை வர் ப.ஜீவானந்தம் உறுதிமொழி வாசிக்க, அனைவரும் உறுதி மொழி ஏற்றுக் கொண்டனர். சங்க நிர்வாகிகள் மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் பா.ராணி, கே.இராஜூ, எம்.மேகநாதன், சி. பாலசுப்பிரமணியன், சொ. கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். சங்க மாவட் டப் பொருளாளர் ப.அந்துவன் சேரல் நன்றி கூறினார்.