தரங்கம்பாடி, மே 19- நாகை மாவட்டம், வள்ளலாகரம் ஊராட்சியில் 30 க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு ஆர்.ஹச்.வி. டிரஸ்ட் சார்பில் அதன் நிறு வனர் முனைவர் மா.ரஜினி சார்பில் 5 கிலோ அரிசி, 5 கிலோ காய்கறி உள்ளிட்ட அத்தியாவசியப் பொ ருட்களை மயிலாடுதுறை ஒன்றிய தலைவர் காமாட்சி மூர்த்தி வழங்கினார். இதில் ஆர்.ஹச்.வி.நிறுவனர் மா.ரஜினி, ஊராட்சி தலைவர் ஜெய சுதா ராபர்ட், ஒன்றியக் குழு உறுப்பி னர் மோகன், திமுக ஒன்றிய பிரதிநிதி பாபு, கிளை செயலாளர் கோபு, அருள்தாஸ், கார்த்திகேயன் பால்ராஜ் ஊராட்சி செயலர் சரவணன் கலந்து கொண்டனர்.