நாகப்பட்டினம், செப்.4- நாகப்பட்டினம், நல்லியான் தோட்டம் பகுதியில் செயல்படும் ஐஸ் கம்பெனி ஒன்று, உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் இன்றிச் செயல்பட்டு வருவது திங்கட்கிழமை அன்று, கண்ட றியப்பட்டு, அதனை, நாகை நகராட்சி உணவுப் பாதுகாப்பு அலு வலர் ஏ.டி.அன்பழகன் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது, உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்றிருக்கவில்லை மற்றும் ஐஸ் தயாரிக்கும் இடம், பயன்படுத்தும் பொருட்கள், உணவைக் கையாளும் நபர்களின் தூய்மை உள்ளிட்டவை திருப்தியாக இல்லை. பின்னர் அந்த நிறுவனத்தின் உரிமையாளரிடம் “ உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் இல்லாமல், உணவு வணிகம் செய்வது சட்டப்படி குற்றமாகும். அதுவும், குழந்தைகள் உண்ணும் இப்படிப்பட்ட கலர் ஐஸ், மிகக் கவனமாகவும் சுகாதார முறையிலும் தயார் செய்யப்பட வேண்டும். இப்படி அனுமதி பெறாமல் உணவுப் பொருள்கள் தயாரிப்பது, அபராதம் மற்றும் சிறைத் தண்டனை பெறத்தக்கக் குற்றமாகும். உடனடியாக உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெறப்பட வேண்டும். “ஐஸ் தயாரிக்கும் இடம் சுகாதாரமாகப் பராமரிக்கப்பட வேண்டும். ஐஸ் தயாரிக்கத் தரமான மூலப் பொருட்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். உணவைக் கையாள்பவர்கள் தன் சுத்தத்தைப் பேண வேண்டும். அடைக்கப்பட்ட ஐஸ் பெட்டியில், தயாரிப்புத் தேதி, காலாவதியாகும் தேதி, உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் எண், தயாரிப்பாளர் முழு முகவரி உள்ளிட்ட அனைத்து விவரங்களும் இருக்க வேண்டும். இந்த ஐஸ் தயாரிப்புப் பொருள்கள், உபயோகிப்பாளர்களைச் சென்றடையும் வரை, தொடர்ச்சியாகக் குளிர்ச்சி இருப்பதற்குப் பராமரிக்கப்பட வேண்டும். “கம்பெனியில் ஐஸ்கள் வாங்கித் தெருவில் விற்பனை செய்ப வர்களும் உணவுப் பாதுகாப்புத் துறையின் உரிமம் பெற்றிருக்க வேண்டும்” என்று எச்சரிக்கை செய்யப்பட்டன. உடனடியாக உரி மம் பெற்று விடுவதாக ஐஸ் கம்பெனி நிறுவனர் தெரிவித்தார்.