சீர்காழி, அக்.23- நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையாறு மீன்பிடித்துறை முகத்தின் மூலம் தினந்தோறும் 300 விசைப்படகுகள், 350 பைபர் படகுகள் மற்றும் 250 நாட்டுப்படகு கள் மூலம் கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்லும் சுமார் 5 ஆயிரம் மீனவர்கள் 94 வது நாளாக கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லவில்லை. அங்கீக ரிக்கப்பட்ட விசைப்படகு உரிமை யாளர்கள் மற்றும் அங்கீகரிக்கப் படாத அரசால் தடை செய்யப்பட்ட விசைப்படகு உரிமையாளர்கள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சனை யின் காரணமாக, மீனவர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் தொடர்ந்து கொண்டே செல்கிறது. பழையாறு துறைமுகத்தில் அர சால் தடை செய்யப்பட்ட 40 விசைப் படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று வந்தன. இந்த படகுகளில் அதிவேக எஞ்சின்கள் பொருத்தப் பட்டன. இந்த படகின் மூலம் அனைத்து வகையான பெரிய மீன்கள் முதல் சிறிய மீன்கள் வரை சுருக்குமடி வலையை வைத்து அள்ளிவிடுவதால் அங்கீகரிக்கப் பட்ட விசைப்படகில் மீன்பிடிக்கச் செல்வோர் உரிய மீன்கள் கிடைக்கா மல் ஏமாற்றத்துடனையே திரும்பி வந்தனர். இதனால் மீனவர்கள் நஷ்டத்தை சந்தித்து வந்தனர். அரசின் மானிய விலையில் டீசல் கிடைக்காமல் இருந்தாலும் அதி வேக தடை செய்யப்பட்ட எஞ்சின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்று வந்தன. இதுகுறித்து பழையாறு அங்கீ கரிக்கப்பட்ட மற்றும் உரிமம் பெற்ற விசைப்படகு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஜூலை 21 ந் தேதி முதல் கடலுக்குள் மீன் பிடிக்கச் செல்லா மல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட னர். இது குறித்து ஜூலை 21ஆம் தேதி மாலை சீர்காழி தாசில்தார் அலுவலகத்தில் இரு தரப்பு மீன வர்கள் இடையே அமைதிப்பேச்சு வார்த்தை நடைபெற்று தீர்வு காணப்படாத நிலையில் மயிலாடு துறை ஆர்.டி.ஓ அலுவலகத்திலும் பேச்சுவார்த்தை நடைபெற்றும் அங்கேயும் உரிய தீர்வு எட்டப்பட வில்லை. இது குறித்து மாவட்ட மீன் துறை உதவி இயக்குநர் நடராஜன் பழையாறு விசைப்படகு உரிமை யாளர்களுக்கு கடந்த ஜூலை மாதம் 22ஆம்தேதி வெளியிட்ட எழுத்துப்பூர்வ அறிவிப்பில் மீன்பிடி விசப்படகுகளில் 240 குதிரை திறனுக்கு மேற்பட்ட இயந்தி ரங்களை பொருத்தி மற்றும் 24 மீட்டர் நீளத்திற்குமேல் உள்ள விசைப் படகுகளை கொண்டு மீன் பிடிப்பில் ஈடுபடுவது 1983 ஆம் ஆண்டு தமிழ்நாடு கடல் மீன் பிடிப்பு ஒழுங்குபடுத்தும் சட்டத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே 240 குதிரைத் திறனுக்கு மேல் உள்ள இயந்திரங்களை உட னடியாக அகற்றவும் பின்னர் மீன் துறை, வருவாய்துறை மற்றும் காவல் துறை வாயிலாக ஆய்வு செய்து படகினை பதிது செய்த பின்னர் விசைப்படகினை இயக்க வேண்டுமென எனவும் இதனை பின்பற்ற தவறும் மீன் பிடி விசைப் படகுகள் மற்றும் மீனவர்கள் மீதும் காவல்துறை மூலம் உரிய நட வடிக்கை எடுக்கப்படும் என்று எச்ச ரிக்கை செய்யப்பட்டது இருந்தும் இருதரப்பு மீனவர்களுக்கு இடையே இதுவரை உடன்பாடு ஏற்படாததால் விசைப்படகுகள் கட லுக்குள் மீன்பிடிக்கச் செல்லாமல் துறைமுகத்திலேயே நிறுத்தப் பட்டுள்ளன. இது குறித்து பழை யாறு விசைப்படகு உரிமை யாளர்கள் சங்கத் தலைவர் அருள் செழியன் கூறுகையில் மீன்பிடி துறை மற்றும் அரசு சார்பில் உரிய நடவடிக்கை மேற்கொண்டாலும் உடன்பாடு இதுவரை ஏற்பட வில்லை. எனவே அங்கீகாரம் பெறாத விசைப்படகுகளில் உள்ள அதிவேக சீன எஞ்சின்களை அகற் றும் வரை மீனவர்கள் வேலை நிறுத்தம் தொடரும் 94 வது நாளாக மீனவர்களின் வேலைநிறுத்தம் தொடர்ந்து நடைபெறுகிறது என்றார்.