tamilnadu

img

துளிர் வினாடி- வினாப் போட்டி அளக்குடி எஸ்.எம்.எஸ் பள்ளி முதலிடம்

சீர்காழி: தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பில் நடைபெற்ற துளிர் வினாடி வினா போட்டி யில் அளக்குடி எஸ்.எம்.எஸ் பள்ளி மாவட்டத்திலேயே முதலிடத்தில் வெற்றி பெற்றது. நாகை மாவட்ட அளவில் 6 முதல் எட்டாம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர் இடை யேயான துளிர் வினாடி வினா போட்டி நாகப்பட்டினத்தில் நடைபெற்றது. அதில் கொள்ளிடம் அருகே உள்ள அளக்குடி எஸ்.எம்.எஸ் நடுநிலைப்பள்ளியைச் சேர்ந்த அதிதி, ஆர்த்தி, ஜெயஸ்ரீ ஆகிய மாணவிகள் அடங்கிய குழுவினர் மாவட்டத்திலேயே முதலிடத்தில் வெற்றி பெற்றுள்ளனர்.  வெற்றி பெற்ற மாணவர்களுக்கு தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தலைவர் ஸ்ரீபன்நாதன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் ஆரீப், பள்ளி தலைமையாசிரியர் பாலு, ஆசிரியர்கள், பெற்றோர் பாராட்டி வாழ்த்தினர்.