சீர்காழி, ஜூன் 2- சீர்காழி அருகே வாய்க்கால் தூர்வாரும் பணியின் போது குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்ட தால் கிராமங்களுக்கு செல்லும் குடிநீர் தடையானது. நாகை மாவட்டம் சீர்காழி அருகே புதுமண்ணியாறு பாசன வாய்க்கால் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பழையபாளையம் கிராமத்தில் பொக்லைன் எந்திரம் கொண்டு தூர்வாரும் பணியில் ஈடுபட்ட போது சுமார் 10 கிராமங்களுக்கு கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் செல்லும் இரும்புக் குழாய் உடைந்தது. இதில் தண்ணீர், கிராமங்க ளுக்கு செல்லாமல் ஒரு நாள் விரயமானது. இது குறித்து தகவலறிந்த குடிநீர் வடிகால் வாரிய நாகப்பட்டினம் நிர்வாகப் பொறியாளர் கருணாகரன், உதவி நிர்வாகப் பொறியாளர் முருகேசன் மற்றும் ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு வந்து உடைந்த குழாயை போர்க்கால அடிப்படையில் சரி செய்து தொடர்ந்து குடிநீர், கிராமங்க ளுக்கு கிடைக்கச் செய்தனர். மேலும் பழையபாளையம் கிரா மத்தில் உள்ள தரைமட்ட நீர்த் தேக்கத் தொட்டியில் குளோரின் அளவை ஆய்வு செய்தனர்.