tamilnadu

செம்பனார்கோவில் ஒழுங்குமுறை  விற்பனை கூடத்தில் பருத்தி ஏலம்

தரங்கம்பாடி, ஜூலை 6- நாகை மாவட்டம் செம்பனார்கோவில் ஒழுங்குமுறை விற்ப னை கூடத்தில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது. செம்பனார்கோவிலில் உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் நாகை கூட விற்பனை செயலாளர் கோ.வித்யா தலை மையில் பருத்தி ஏலம் நடைபெற்றது. இந்திய பருத்தி கழ கத்திலிருந்து ரமேஷ், இளங்கோவன், ஆனந்தன்குட்டி குமார்,  தஞ்சை மாவட்ட வியாபாரி திருமாறன், ராஜவேல், நாகை  மாவட்ட வியாபாரி கலியமூர்த்தி, செந்தில்வேலன், விழுப்புரம்  பழனி, சந்திரன், நாசர் மற்றும் 15-க்கும் மேற்பட்ட வியா பாரிகள் பருத்தி ஏலத்தில் கலந்து கொண்டனர். விற்பனை கூட மேற்பார்வையாளர் பாபு முன்னிலையில் ஏலம் நடைபெற்று அதிகபட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.55.50  விலை போனது. வரத்து அதிகமாக இருந்ததால் அருகேயுள்ள  தனியார் கல்லூரி ஒன்றில் இடவசதி செய்யப்பட்டிருந்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். 800-க்கும் மேற்பட்ட விவ சாயிகள் 3 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட பருத்தி மூட்டை களை கொண்டு வந்து பயனடைந்தனர்.