நாகப்பட்டினம்:
மறைந்த மகத்தான தலைவர் தோழர் ஏ.வி.முருகையன், போராட்டக்களத்தில் எப்போதுமே சமரசம் செய்து கொள்ளாத முன்னணி தளபதியாக திகழ்ந்தவர் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் புகழஞ்சலி செலுத்தினார்.
நாகை மாவட்டம் வெண்மணச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்மாநிலக்குழு உறுப்பினரும், முன்னாள் மாவட்டச் செயலாளருமான தோழர் ஏ.வி.முருகையன் காலமானார். செவ்வாயன்று அவரது உடலுக்கு தலைவர்கள் உள்பட ஏராளமான தோழர்கள் அஞ்சலி செலுத்தினர்.இறுதியஞ்சலியைத் தொடர்ந்து மாவட்டச் செயலாளர் நாகை மாலி தலைமையில் இரங்கல் கூட்டம் நடந்தது. மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ் ணன் அஞ்சலியுரை ஆற்றினார். அப் போது அவர் கூறுகையில், “தோழர் ஏ.வி.முருகையன் தன்னுடைய உடல்நிலையைப் பற்றிக் கவலைப்படாது,
பசி, உறக்கம் பாராது இயக்கத்திற் காகவும் மக்களுக்காகவும் தளராது தொண்டாற்றியவர். 1979 – 80 வாக்கில்திருத்துறைப்பூண்டியில் விவசாயிகள் சங்க மாநில மாநாடு நடந்தபோதுநானும், ஏ.வி.எம். தோழரும் மாநிலக்குழுவுக்குத் தேர்வு செய்யப்பட்டோம். அவர் சங்கத்தின் மாநிலச் செயலாளராக இருந்தபோது நாகப்பட்டினத்தில், 2012ல் மாநில மாநாடு மிகச் சிறப்பாகநடைபெற்றது. நாம், நமது இயக்கம், நமது தோழர்கள் என்னும் சமத்துவக் கொள்கை உடையவர். கொள்கையை இழந்து சமரசம் காணாதவர். போராட்டக் களங்களில் முன்னணித் தளபதியாக நின்று பலமுறை சிறை சென்றவர். சோர்வே அறியாதவர். தலைவரைஇழந்து தவிக்கும் அவருடைய குடும் பத்தாருக்கு சிபிஎம் மாநிலக்குழு சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது குடும்பத்திற்கு நாங்கள் என்றும் துணை நிற்போம். இயக்கத்திற்காகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் தோழர் ஏ.வி.முருகையன் அயராது எப்படி பாடுபட்டாரோஅந்த வழியில் நாம் பாடுபடுவதே அவருக்கு நாம் செலுத்தும் இறுதி அஞ்சலிஆகும்” என்று கூறினார்.முன்னதாக, தோழர் ஏ.வி.முருகையன் மறைவுக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநிலப் பொதுச் செயலாளர் பெ.சண்முகம், விவசாயத் தொழிலாளர் சங்க மாநிலத் தலைவர் ஏ.லாசர், தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொதுச் செயலாளர் கே.சாமுவேல் ராஜ், விவசாயத் தொழிலாளர் சங்க முன்னாள் அகில இந்திய தலைவர் எஸ். திருநாவுக்கரசு, முன்னாள் மாநில பொதுச் செயலாளர் ஜி.மணி மற்றும் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.