tamilnadu

img

விவசாயிகளின் கடன்களை ரத்து செய்க! - நாகையில் விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

நாகப்பட்டினம், ஜூலை 19- கொரோனா ஊரடங்கால் வாழ்வாதா ரம் மற்றும் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ள மையால், விவசாயிகளின் கடன்களை ரத்து  செய்திட வேண்டும், விவசாயிகளுக்குப் புதிய கடன்களை எவ்விதத் தடைகளு மின்றி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரி க்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு விவசா யிகள் சங்கம் சார்பில், நாகை மாவட்டத்தில்  பல்வேறு இடங்களில் தொடக்க வேளா ண்மைக் கூட்டுறவு வங்கிகள் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிக்கல்
சிக்கல் கூட்டுறவு வங்கி முன்பு விவசாயி கள் சங்க மாவட்டக்குழு உறுப்பினர்கள் கோ.முருகையன் தலைமையும் பி.சந்தி ரன் முன்னிலையும் வகித்தனர். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் வி.மாரிமுத்து கோரிக்கை விளக்கவுரையாற்றினார்.
கீழ்வேளூர்
கீழ்வேளூரில் எஸ்.பாண்டியன் தலைமை வகித்தார். சி.பி.எம். மாவட்டச் செயலாளர் நாகைமாலி சிறப்புரையாற்றி னார். வடக்குப் பனையூரில் ஆர்.முத்தை யன் தலைமையில் நடந்த அர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் சிறப்புரை யாற்றினார். வெண்மணியில் மாவட்ட க்குழு உறுப்பினர் என்.எம்.அபுபக்கர் தலைமையிலும், ஆதமங்கலத்தில் வி.ச. மாவட்டத் தலைவர் எம்.என்.அம்பிகாபதி தலைமையிலும் ஆந்தக்குடியில் சி.பி.எம்.  ஒன்றியச் செயலாளர் ஜி.ஜெயராமன் விள க்கவுரையாற்ற கே.எஸ்.கோபாலன் தலை மையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கீழையூர் ஒன்றியம்
கீழையூர் ஒன்றியம் பாலக்குறிச்சி யில் கே.கிருஷ்ணன், திருப்பூண்டியில் சி.கந்தசாமி, கீழையூரில் கே.சித்தார்த்தன் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. தலைஞாயிறு ஒன்றியம், ஓரடியம்ப லம் மற்றும் மணக்குடியில் சிபிஎம் தலை ஞாயிறு ஒன்றியச் செயலாளர் ஏ.வேணு, கே.அலெக்சாண்டர் ஆகியோர் தலை மையில், வி.தொ.ச. மாநிலப் பொதுச் செய லாளர் வி.அமிர்தலிங்கம் பங்கேற்றார். கொளப்பாட்டில் எம்.என்.அம்பிகாபதி, கோயில்பத்தில் செல்வராஜ் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. பிராந்தி யக்கரை, தாணிக்கோட்டகம், ஆயக்கார ன்புலம், மருதூர்-தெற்கு, கரியாப்பட்டி னம் ஆகிய இடங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திருமருகல்
திருமருகலில் வி.ச.ஒன்றியச் செயலா ளர் பொன்.மணி தலைமை வகித்தார். சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம்.ஜெய பால், ஸ்டாலின்பாபு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.