சென்னை:
நாகப்பட்டினத்தில் வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்று சட்டப் பேரவையில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.வேளாண்மை துறை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்,"மாதம் ஒருநாள் எம்எல்ஏக்கள் விவசாயிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடத்தி குறைகளை கேட்டறிந்து தீர்வு காண வேண்டும் என முதல் வர் உத்தரவிட்டுள்ளதாக கூறியிருக்கிறார்" என்றார்.கரூர், நாகை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் தலா 30 கோடி செலவில் புதியதாக வேளாண் கல்லூரிகள் அமைக்கப்படும் என்றும் மேலும் மாவட்ட அளவில் சிறந்த விவசாயிகளுக்கு விருதுகள் வழங்கவும், திருப் பூரில் புதிய விதை பரிசோதனை நிலையம் அமைக்கப்பட வுள்ளதாக கூறினார்.
விவசாயமே பிரதான தொழிலான நாகை மாவட்டத்தில் வேளாண்மைக் கல்லூரி என்பது கிடையாது. எனவே நாகை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்ட ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களின் நலன்களை கருத்தில் கொண்டு நாகப்பட்டினத்தில் ஒரு வேளாண்மைக்கல்லூரி அமைத்துக் கொடுக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கீழ்வேளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வி.பி.நாகை மாலி துறையில் அமைச் சருக்கும் முதலமைச்சருக்கும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தார்.இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த வேளாண்மை மானியக் கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் புதிய அறிவிப்புகளை வெளியிட்ட போது நாகப்பட்டினத்தில் ஒரு வேளாண்மை கல்லூரி அமைக்கப்படும் என்றார்.
வேளாண்மைத் துறை அமைச்சரின் இந்த அறிவிப்பு தனது நீண்ட நாள் கோரிக்கைக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி என்றும் இதனால் தனது மாவட்ட மட்டுமின்றி தொகுதி மக்கள், விவசாயக் குடும்பங்கள், விவசாயக் கூலித் தொழிலாளர்களின் குடும்பங்கள், தனது சார்பிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பிலும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் எம். ஆர்.கே. பன்னீர்செல்வம் ஆகியோருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாக கூறினார்.