சீர்காழி, அக்.10- சீர்காழி அருகே பழைய பாளையம் கிராமத்தில் நிலத்தடி நீர் கருமையாக மாறி துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் அதிர்ச்சி யில் உள்ளனர். நாகை மாவட்டம் சீர்காழி அருகே பழையபாளையம், காடு வெட்டி, கொடக்காரமூலை பாலக் காடு ஆகிய கிராமங்களில் சன்னிதி தெரு வடக்குத் தெரு, மேலத் தெரு, முத்தரையர் தெரு, மாரியம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடு களில் 1600 குடும்பங்களைச் சேர்ந்த வர்கள் வசித்து வருகின்றனர். கடந்த 4 வருடங்களாக இப்பகுதி யில் நிலத்தடி நீர் நிறம் மாறி விட்டது. ஊராட்சிகள் சார்பில் அமைத்து தரப்பட்ட கைப் பம்புகளிலும் சொந் தமாக வீடுகளில் வைத்துள்ள கைப் பம்புகளிலும் கடந்த 5 வருடத்திற்கு முன்பு நல்ல தண்ணீர் கிடைத்தது. இதனை அப்பகுதியைச் சேர்ந்த அனைவரும் பயன்படுத்தி வந்த னர். ஆனால் பழையபாளையம் கிரா மத்தில் கடந்த சில வருடங்களாக நிலத்தடி நீர் நிறம் மாறி துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து பழையபாளையம் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் கூறு கையில், பழையபாளையம் ஊராட்சியில், நிலத்தடி நீர் மிகவும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் இருந்தது. இதனையே அனைத்து மக்களும் பயன்படுத்தி வந்தனர். ஆனால் கடந்த 4 வருடங்களாக நிலத்தடி நீர் முற்றிலும் நிறம் மாறி கருமையாகவும் துர்நாற்றமும் வீசுகீறது. ஓ.என்.ஜி.சி நிறுவனம் சார்பில் எண்ணெய் எடுக்கும் பணி இப்பகு தியில் ஆரம்பித்த நாளிலிருந்து நிலத்தடி நீர் கருமையாக மாறி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் நிலத்தடி நீரை பயன்படுத்த முடிய வில்லை. குடிநீர்த் தட்டுப்பாட்டை போக்கும் வகையில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்த் திட்டம் மூலம் கிடைக்கும் நீரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் தற்பொழுது கூட்டுக் குடிநீர்த் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் தண்ணீர் தேவைக்கு மிகக் குறைவாகவே உள்ளதால் போதிய குடிநீர் வழங்க வேண்டும் என்றனர்.