மும்பை, மே 26-ஆஸ்கர் விருதுகள் வழங்கும் நிறுவனம் மும்பையில் புதிய அலுவலகத்தை திறக்கஉள்ளது. ஆஸ்கர்ஸ் அகாடமியின் தலைவர் ஜான் பெய்லி தமது மனைவி கரோலுடன் சனிக்கிழமையன்று மும்பையில் இதனை அறிவித்துள் ளார். முதன்முறையாக இந் தியா வந்துள்ள அவர், மும்பையை ஆஸ்கர்ஸ் நிறுவனஅலுவலகம் கொண்ட மூன் றாவது நகரமாக மாற்றும் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்திருப்பதாக கூறினார். ஏற்கனவே நியூயார்க் மற்றும் லண்டனில் ஆஸ்கர் அகா டமி இயங்கி வருகிறது.இந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல பூரண ஒத்துழைப்பு அளிப்பதாக தெரிவித்துள்ள மகாராஷ்டிரா அரசு உடனடியாக அமைச்சர்வினோத் தாவடே தலைமையில் ஒரு குழுவை நியமித்துஇத்திட்டத்திற்கு தேவையான உதவிகளை செய்ய முன்வந்துள்ளது.