tamilnadu

img

பொருளாதார இயல்பு நிலைக்கு திரும்பும் 5 மாநிலங்கள்....

மும்பை:
இந்தியாவில் கொரோனா தாக்கத்தையொட்டி அமல்படுத்தப்பட்ட பொதுமுடக்கத்தில் 2 மாதங்களுக்குப் பிறகு, தற்போதுசில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

\இந்நிலையில், நாட்டில் பொருளாதார நடவடிக்கைகள் எந்த அளவில் உள்ளன என்று மும்பையைச் சேர்ந்த ‘எலாரா செக்யூரிடிஸ்’ என்னும் நிறுவனத்தைச் சேர்ந்த கரீமா கபூர் சர்வே ஒன்றை நடத்தி, அதன் முடிவுகளை வெளியிட்டுள்ளார். அதில், “ஊரடங்கு விதிகள் தளர்த்தப்பட்ட நிலையில் ஒவ்வொரு மாநிலத்திலும் வர்த்தக மற்றும் தொழில் நடவடிக்கைகள் ஓரளவு தொடங்கி உள்ளன; குறிப்பாக, இந்தியாவின் மொத்த ஜிடிபியில் 27 சதவிகித பங்களிப்பைக் கொண்டிருக்கும் தமிழ்நாடு, கேரளா, பஞ்சாப், ஹரியானா, கர்நாடகா ஆகிய 5 மாநிலங்களில் பொருளாதார நடவடிக்கைகள் முழு வீச்சில் தொடங்கி இருக்கின்றன” என்று கூறியுள்ளார்.“இம்மாநிலங்கள் முன்னேறி வருவதைஉறுதியாகக் கூற முடியும். மின்சாரப் பயன்பாடு, போக்குவரத்து, மொத்த சந்தைக்கு வரும் விவசாயப் பொருட்கள் இம்மாநிலங்களில் மிக வேகமாக அதிகரித்து வருகின்றன. அதேவேளையில், கொரோனா பாதிப்பால் விதிகள் கடுமையாக்கப்பட்டு இருக்கும், தொழில் மாநிலங்களான மகாராஷ்டிரா மற்றும் குஜராத், வர்த்தக மற்றும் தொழில் நடவடிக்கைகளில் பின் தங்கியுள்ளன” என்றும் கரீமா கபூர் தெரிவித்துள்ளார்.