tamilnadu

img

ஜிடிபி மேலும் வீழ்ச்சி அடையும்

மும்பை:
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியானது, நடப்பு 2019-20 நிதியாண்டிலும் சரிவையே சந்திக்கும் என்று பயன்பாட்டுப் பொருளாதார ஆராய்ச்சி தொடர்பான தேசியக் குழு (என்சிஏஇஆர்) எச்சரிக்கை செய்துள்ளது.“மக்களின் நுகர்வுத் திறன் சரிந்து, தேவை குறைந்துள்ளதால், வளர்ச்சி பாதிக்கப்பட்டு உள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் வளர்ச்சி(ஜிடிபி) கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவில் 5 சதவிகிதமாக சரிந்த நிலையில், இரண்டாம் காலாண்டில் (ஜூலை - செப்டம்பர்) அது 4.4 சதவிகிதம் அல்லது 4.9 சதவிகிதமாக குறையும்” என்று என்சிஏஇஆர் கூறியுள்ளது.மேலும், நடப்பு 2019-20 நிதியாண்டின் ஒட்டுமொத்த வளர்ச்சியும் 4.9 சதவிகிதமாகவே இருக்கும் என்று கணித்துள்ளது.இதனிடையே, இந்தியா தனது செலவுகளைக் குறைக்காவிட்டால் நிதிப் பற்றாக் குறையில் பெரிய பாதிப்பைச் சந்திக்கும் என்று ‘கிரிசில்’ சர்வதேச மதிப்பீட்டு நிறுவனத்தின் தலைமைப் பொருளாதார வல்லுநரான டி.கே. ஜோஷி நவம்பர் 16-ஆம் தேதிமும்பையில் நிகழ்ச்சியொன்றில் பேசும்போது எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்தியா நடப்பாண்டில், நிதிப்பற் றாக்குறை இலக்கை 3.4 சதவிகிதமாக நிர்ணயித்துள்ளது. ஆனால், இது இலக்கைத் தாண்டி 3.7 சதவிகிதமாக உயரலாம் என்று ‘நோமுரா’ நிறுவனமும் ஏற்கெனவே எச்சரித்துள்ளது.