tamilnadu

img

ஊரடங்கு காலத்திலும் 109 விவசாயிகள் தற்கொலை,.....

மும்பை:
மகாராஷ்ட்ரா மாநிலம் மராத்வாடா பகுதியில் விவசாயிகள் தற்கொலை தொடர் அவலமாக உள்ளது.

இந்நிலையில், மார்ச், ஏப்ரல்ஊரடங்கு காலத்திலும் நாளொன்றுக்கு 2 விவசாயிகள் விகிதம்மொத்தம் 109 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருப்பதாக, அவுரங்காபாத் டிவிஷனல் கமிஷனர் அலுவலகம் மகாராஷ்டிர மாநில அரசுக்கு அறிக்கை அளித்துள்ளது.

இதில், மார்ச்சில் 73 விவசாயிகளும் ஏப்ரலில் 36 விவசாயிகளும் அங்கு தற்கொலை செய்துள்ளனர்.மேலும், ஏப்ரல் வரையிலான 4 மாத காலக்கட்டத்தில் மட்டும்231 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள் என்றும் அறிக்கை தெரிவித்துள்ளது.ஊரடங்கு காரணமாக,வேளாண் விளைபொருட்களுக்கு சந்தை இல்லை. விவசாயிகள் செய்த உற்பத்தியில் 10 சதவிகிதம் கூட விற்கவில்லை. இதனால் அன்றாடம் குடும்பம் நடத்தவும் பணமில்லை; அடுத்த சாகுபடிக்கும் பணமில்லை. இதன்காரணமாகவே விவசாயிகள் தற்கொலை முடிவுக்குச் சென்றதாக கூறப்படுகிறது.தேசிய மனித உரிமைகள் ஆணையத்திற்கு மகாராஷ்ட்ரா மாநில அரசு அளித்த தகவலின்படி, ஜனவரி 2011 முதல் டிசம்பர்2014 வரை 6 ஆயிரத்து 268 விவசாயிகளும், 2015-2018 கால கட்டத்தில் 11 ஆயிரத்து 995 விவசாயிகளும் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.