tamilnadu

img

பொருளாதார மந்தத்தை அதிகரித்திடவே நிதியமைச்சரின் அறிவிப்பு இட்டுச்செல்லும்

சிபிஎம் கடும் விமர்சனம்

புதுதில்லி, செப்.15- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாயை முதலீட்டாளர்களுக்குக் கடனாக வழங்க இருப்பதாகக் கூறியிருப்பது, பொருளாதார மந்த நிலைமையை மேலும் அதிகரிக்கவே இட்டுச்செல்லும் என்று மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சி கூறியுள்ளது.  இது தொடர்பாக கட்சியின் அரசியல் தலை மைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நாட்டு மக்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கி அதன்மூலம் அவர்களின் தேவை களை உயர்த்துவதற்கு வழிசெய்துதரும் விதத்தில் நம் நாட்டிற்குத் தேவைப்படும் உள் கட்டமைப்பு வசதிகளைக் கட்டிஎழுப்பு வதற்குத் தேவையான பொது முதலீட்டை மிகப்பெரிய அளவில் அதிகரிப்பதற்குப் பதி லாக, மத்திய நிதி அமைச்சர், தற்போதைய பொருளாதார மந்தத்திற்குக் காரணமாக அமைந்துள்ள நடவடிக்கைகளை மீண்டும் எடுத்திருக்கிறார்.

தனியார் முதலீடுகளை மேலும் அதி கரிப்பதன் மூலமாக, ஏற்றுமதியை உயர்த்து வதற்கான முயற்சி வெற்றி பெறாது. உலக அளவில் வர்த்தகப் பரிவர்த்தனைகள் சுருங்கிக் கொண்டிருக்கின்றன. மக்கள் மத்தி யில் வாங்கும் சக்தி மிக மோசமான முறை யில் குறைந்திருப்பதால், உற்பத்தி செய்து சந்தைக்கு வரும் பொருள்களை வாங்கக் கூடிய நிலையில் அவர்கள் இல்லை.

பொது முதலீட்டை அதிகரிப்பதற்கோ, மகாத்மா காந்தி கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டத்தின்கீழ் பணிபுரிந்த ஏழை மக்க ளின் ஊதிய நிலுவையைத் தருவதற்கோ முன் வராமல், இவ்வாறு நடவடிக்கைகள் மேற் கொண்டு அவர்களின் வாங்கும் சக்தியை அதி கரித்திடாமல், அதற்குப் பதிலாக, பல்வேறு திட்டங்களின் பெயர்களில் சுமார் 70 ஆயிரம் கோடி ரூபாயைத் தனியார் கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு அள்ளித்தர மத்திய நிதி அமைச்சர் முன்வந்திருக்கிறார். மக்களின் வயிற்றில் அடித்து, கொள்ளை லாபமீட்டுவோருக்கு மீண்டும் சலுகைகள் அளிக்கும் விதத்தில் மத்திய நிதி அமைச்சர் அறிவித்திருக்கும் கொள்கைகளுக்கு எதி ராக மக்கள் கிளர்ந்தெழ வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு மக்களை அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அரசியல் தலைமைக்குழு அறிக்கையில் கூறியுள்ளது.      (ந.நி.)