மும்பை:
மகாராஷ்டிராவில், வாள், துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்ற விஸ்வ ஹிந்து பரிசத்அமைப்பின் பெண் உறுப்பினர்கள் கைது செய்யப் பட்டுள்ளனர்.
விஸ்வ ஹிந்து பரிசத் அமைப்பினர், தமது பெண் உறுப்பினர்களை யமுனா நகரில் ஒருங்கிணைக்க ‘ஷோபா யாத்திரை’ எனும் பெயரில் ஊர்வலம் ஒன்றை நடத்தியுள்ளனர்.
இந்த ஊர்வலத்திற்கு போலீசார் அனுமதி மறுத்திருந்தபோதும், தடையை மீறி அவர்கள் ஊர்வலம் நடத்தியுள்ளனர். மகாராஷ்டி ரா மாநிலத்தின் நாக்பூர் பகுதியில் உள்ள பிம்பிரி சின்சாவத்தில் நடந்த இந்த ஊர்வலத்தின்போது, 4 பெண்களின் கைகளில் கூரியவாளும், ஐந்து பெண்களின் கைகளில் துப்பாக்கிகளும் இருந்துள்ளன.
இதையடுத்து ஊர்வலம் சென்ற பெண்கள் உட்பட பலரையும் மகாராஷ்டிர போலீசார் கைது செய்துள்ளனர். தடையை மீறியது; ஆயுதங்களுடன் ஊர்வலம் சென்றது தொடர்பான பிரிவுகளில் அவர்கள் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.மேலும் அந்த பெண்கள் வைத்திருந்த துப்பாக்கிகள் எந்த வகையைச் சார்ந்தது, அதற்கான புல்லட்டுகள் எப்படி கிடைத்து? என்றும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.