tamilnadu

img

மதுரையில் வாலிபர் சங்க மாநில பயிலரங்கம்

மதுரை, நவ.6 -  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் சார்பில் மாநில பயிலரங்க நிகழ்ச்சி மதுரை மாவட்டம் திருப்ப ரங்குன்றத்தில் கே.பி. ஜானகி அம்மாள் நினைவரங்கத்தில் நடை பெற்றது.  இந்த பயிலரங்கத்திற்கு மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக் தலைமை வகித் தார். மாநிலத் துணைத் தலைவர் கே. ஆர்.பாலாஜி வரவேற்று பேசினார். நிகழ்ச்சியை துவக்கி வைத்து மதுரை மாநகராட்சி துணை மேயர் டி. நாக ராஜன் பேசினார். ‘உள்ளாட்சியில் நமது’ பங்கு என்னும் தலைப்பில் காந்தி கிராம பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் கே. பழனி துரை பேசினார்.  ‘சுற்றுச்சூழலும் - காலநிலை மாற்ற மும்’ என்னும் தலைப்பில் தமிழ்நாடு  அறிவியல் இயக்கம் மாநிலத் தலை வர் முனைவர் எஸ்.தினகரன் பேசி னார். மாநிலச் செயலாளர் ஏ.வி. சிங்கார வேலன் நிறைவுரையாற்றினார். சங்கத்தின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் பி. தமிழரசன் நன்றி கூறினார். இந்நிகழ்ச்சியில் மாநி லத் துணைத் தலைவர் டி.செல்வராஜ், மாநில செயற்குழு உறுப்பினர் என்.நிருபனா மற்றும் மாநிலக் குழு உறுப்பி னர்கள் ஏ.சுரேஷ், இ.சுரேஷ், கே. முகேஷ், ஏ.பாவல்சிந்தன், கே.கருப்ப சாமி, மற்றும் மாவட்டத் தலைவர்கள் வி. கருப்புசாமி (மதுரை புறநகர்), எஸ். தினேஷ்குமார் (தூத்துக்குடி), கே.மணி கண்டன் (இராமநாதபுரம்) உட்பட வாலிபர் சங்கத்தின் மாநில - மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.