tamilnadu

img

பஜ்ரங் தள் குண்டர்கள் தாக்கியதாக பழங்குடியின இளம் பெண்கள் புகார்!

பஜ்ரங் தள் குண்டர்கள் தாக்கியதாக பழங்குடியின இளம் பெண்கள் புகார்!

புதுதில்லி, ஆக. 3 - ஜோதி சர்மா தலைமையிலான பஜ்ரங் தள் குண்டர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, பழங்குடியின இளம் பெண்கள் புகார் அளித்துள்ளனர்.  கன்னியாஸ்திரிகளுடன் இருந்த போது, ஜோதி சர்மா தலைமையிலான பஜ்ரங் தள் குண்டர்களின் கும்பல் தாக்குதலுக்கு தாங்கள் உள்ளானதாக புகாரில் தெரிவித்துள்ளனர். ரயில் நிலையத்திலும் காவல் நிலையத்திலும் பஜ்ரங் தள் பெண்களும் ஆண்களும் கன்னியாஸ்திரிகளைத் தாக்கும் காட்சிகள் ஏற்கெனவே காணொளியாக வெளிச்சத்திற்கு வந்தன. அதில், ஜோதி சர்மா, கன்னியாஸ்திரிகள் பேசினால் அறைந்து விடுவேன் என்று கூச்சலிட்டு கன்னியாஸ்திரிகளுக்கு எதிராக வாக்குமூலம் அளிக்குமாறு இளம் பெண்களை மிரட்டினார். பல்வேறு வழக்குகளில் குற்றத் தொடர்புடைய அவர்கள், காவல்துறையினரையே காட்சிப்பொருளாக்கி அட்டூழியங்களைச் செய்தனர். இந்தப் பின்னணியிலேயே பாதிக்கப்பட்ட பழங்குடி இளம்பெண்கள் புகார் அளித்துள்ளனர்.