tamilnadu

img

லெனின் தொகுப்பு நூல் அறிமுக சிறப்பு முகாம் வெற்றிகரமாக நிறைவு!

லெனின் தொகுப்பு நூல் அறிமுக  சிறப்பு முகாம் வெற்றிகரமாக நிறைவு!

குன்னூர், ஆக. 3 -  பாரதி புத்தகாலயம் வெளி யிட்டுள்ள லெனின் தொகுப்பு நூல் அறிமுக பயிற்சி முகாம், குன்னூ ரில் ஆகஸ்ட் 2, 3 ஆகிய இரு நாட்கள் நடைபெற்றது.  மொத்தம் 12 தொகுதிகளாக பிரிக்கப்பட்ட இந்த பயிற்சி வகுப்பில்  பல்வேறு  கருத்தாளர்கள் நூல் அறிமுக உரையாற்றினர்.  ஆகஸ்ட் 2 அன்று காலை அமர்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் மத்திய கட்டுப்பாட்டுக் குழுத் தலை வர் ஜி.ராமகிருஷ்ணன் (தொகுதி 1) காணொலி வாயிலாக உரை நிகழ்த்தி துவக்கி வைத்தார்.  அ. அன்வர் உசேன் (தொகுதி 2), ஐ. ஆறுமுக நயினார் (தொகுதி 3), எஸ். விஜயன் (தொகுதி 4), ஆயிஷா நடராசன் (தொகுதி 5),  நர்மதாதேவி (தொகுதி 10), கமலா லயன் (தொகுதி 7), ச. தமிழ்ச்செல் வன் (தொகுதி 8) ஆகியோர் நூல் அறிமுக கருத்துரை வழங்கினர். ஆகஸ்ட் 3 அன்று ஜி. செல்வா  (தொகுதி 9), அ. சவுந்தரராசன் (தொகுதி 6), எஸ்.பி.ராஜேந்தி ரன் (தொகுதி 11), செ.முத்துக் கண்ணன் (தொகுதி 12) ஆகியோர் கருத்துரை நிகழ்த்தினர். நிறைவு நிகழ்ச்சியில் மார்க்சிய அறிஞர் எஸ்.வி. ராஜதுரை வாழ்த்துரை வழங்கினார். கட்சியி ன் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் நிறைவுரை நிகழ்த்தினார். பாரதி புத்தகாலயம் மேலாளர் க. நாகராஜன் ஒருங்கிணைப்பில் நடை பெற்ற இந்த பயிற்சி வகுப்பில் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் 100-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் கலந்துகொண்டு  லெனினின் எழுத்துக்களை ஆழமாக  அறிந்து கொண்டனர். முகாமில், கட்சியின் மாநிலக்குழு  உறுப்பினர் ஆர். பத்ரி, நீலகிரி மாவட்டச் செயலாளர் வி.ஏ. பாஸ்கரன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மற்றும் சிராஜுதீன் (பாரதி புத்தகாலயம்) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.