ஒன்றியத்தின் முன் யாசகம் கேட்கவில்லை. கேர ளத்தை அவமதித்த தனது கருத்தை ஜார்ஜ் குரியன் திரும்பப் பெற்று மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று கேரள அமைச்சர் பி.ஏ. முகமது ரியாஸ் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”மூன்றாவது மோடி அரசாங்கத்தின் இரண்டாவது பட்ஜெட்டில் கேரளம் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டது. பட்ஜெட் டில் கேரளத்திற்கான எய்ம்ஸ் அல்லது வேறு எந்த சிறப்புத் திட்டங்களும் இல்லை. கேரளம் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரூ.24,000 கோடி சிறப்பு பொருளாதார தொகுப்பு உட்பட எந்த திட்டங்களுக்கும் ஒன்றிய பட்ஜெட்டில் அனுமதி வழங்கப்படவில்லை.
வயநாடு நிவாரணத்திற்காக ரூ.2,000 கோடி தொகுப்பு, வன விலங்கு பிரச்சனையை தீர்க்க ரூ.1,000 கோடி தொகுப்பு, நாட்டின் மிக முக்கியமான துறைமுகமாக மாறி வரும் விழிஞ்ஞத்திற்கு ரூ.5,000 கோடி சிறப்பு தொகுப்பு ஆகியவற்றை கேரளம் கோரி யிருந்தது. இவற்றில் எதையும் வழங்க ஒன்றியம் தயாராக இல்லை. ஒன்றிய அரசு மூலம் நிதி நெருக்கடிக்கு மேலதிகமாக, இயற்கை பேரழிவுகளும் ஏற்பட வாய்ப்புள்ள சூழ்நிலையில், கேர ளம் ஒரு சிறப்புத் தொகுப்பைக் கோரியது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது முந்தைய பட்ஜெட் உரையில் ஒரு முறை கூட கேரளத்தின் பெயரைக் குறிப்பிட வில்லை. கேரள மக்களை நரக வேதனைக்கு உள்ளாக்க ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. கேரளா வில் வளர்ச்சித் திட்டங்கள் ஒன்றிய அரசின் மாதிரியாகவே உருவாக் கப்பட்டன என்பதை நினைவில் கொள்ள வேண்டும்” என முகமது ரியாஸ் கண்டனம் தெரிவித்துள் ளார்.
சுரேஷ் கோபி பேச்சுக்கு கே.ராதாகிருஷ்ணன் எம்.பி., எதிர்ப்பு
இதனிடையே, பழங்குடியினர் துறையை உயர் சாதியினர் நிர்வகிக்க வேண்டும் என்ற ஒன்றிய இணையமைச்சர் சுரேஷ் கோபியின் கூற்றுக்கு எதிராக பரவ லான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. முற்போக்கு மற்றும் இளைஞர் அமைப்புகளும், ஏகேஎஸ், பிகேஎஸ் உள்ளிட்ட அமைப்புக ளும் ஒன்றிய அமைச்சரின் பேச்சு க்கு எதிர்ப்பு தெரிவித்தன. நாடாளு மன்ற உறுப்பினர் கே.ராதா கிருஷ்ணன் கூறுகையில், “இந்திய அரசியலமைப்புச் சட்டம் சமத்து வத்தை உறுதியளிக்கிறது. சுரேஷ் கோபியின் கருத்துக்கள் இதற்கு எதிரானவை” என கூறினார். கேரளத்தில் பழங்குடியின ருக்கு ஒதுக்கப்பட்ட அனைத்து பெட்ரோல் பம்புகளும் உயர் சாதி யினரின் கைகளில் இருப்பதாக வும், அவற்றில் குறைந்தபட்சம் ஒன்றையாவது மீட்டெடுத்து தருவது சாத்தியமா? என்றும் தலித் ஆர்வலர் தன்யா ராமன் முகநூலில் எழுதினார். ஒன்றிய அமைச்சரின் அணுகுமுறைக்கு எதிராக சமூக ஊடகங்களிலும் கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளன. அடுத்த பிறவியில் பிராமணராகப் பிறப்பது குறித்து சுரேஷ் கோபி யின் பழைய கூற்று மீண்டும் சமூக ஊடகங்களில் விவாதிக்கப்பட்டு வருகிறது.