பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக திரண்ட உலக நாடுகள் நேதன்யாகு உரைக்கு எதிராக ஐ.நா.வில் கூட்டாக வெளிநடப்பு
நியூயார்க், செப். 27 - ஐக்கிய நாடுகள் அவையின் 80-ஆவது பொதுச்சபை கூட்டத்தில், இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் உரையைப் புறக்கணித்து, உலக நாடுகளின் பிரதிநிதிகள் கூட்டாக வெளிநடப்பு செய்தனர். பாலஸ்தீனர்களைக் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்துவரும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு-வை, சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் போர்க்குற்றவாளியாக அறிவித்து ள்ள பின்னணியில், அவர் ஐக்கிய நாடுகள் அவையில் பேசுவதற்காக வெள்ளிக்கிழமையன்று மேடை யேறினார். அப்போது, உலக நாடு களின் பிரதிநிதிகள் கூட்டாக வெளி நடப்பு செய்து, தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.
அவமானப்பட்டும் திருந்தாத நேதன்யாகு
இது சர்வதேச அளவில், இஸ் ரேல் நாட்டிற்கும் பிரதமர் நேதன் யாகுவுக்கும் அவமானகரமான ஒன்றாக அமைந்தது. எனினும், அந்த அவமானத்திற்குப் பிறகும் நேதன்யாகு, ஐ.நா. அவையில் காலி இருக்கைகளைப் பார்த்து, 45 நிமிடம் வரை உரையாற்றியுள்ளார். அந்த உரையில், “இனப்படு கொலை தாக்குதலை நிறுத்தப் போவதில்லை” என கொக்கரித்து, எவ்வளவு அவமானப்பட்டாலும் தாம் திருந்தப் போவதில்லை என்ப தை நேதன்யாகு காட்டியுள்ளார். பாலஸ்தீனர்கள் மீதான ‘இனப் படுகொலை’ நடவடிக்கைகளை நியாயப்படுத்தியிருக்கும் நேதன் யாகு, அதை நிறுத்தப் போவ தில்லை என்றதுடன், பாலஸ்தீன த்தை உலக நாடுகள் அங்கீகரித் தது அவமானகரமான முடிவு; மேற்குலக நாடுகள் அழுத்தத்தின் காரணமாக அடிபணிந்து இருக்க லாம்; ஆனால் இஸ்ரேல் வளைந்து கொடுக்காது என பேசியுள்ளார். நேதன்யாகுவின் ஐ.நா. உரை யானது இஸ்ரேல் ராணுவத்தின் மூல மாக காசாவில் ஒலிபெருக்கிகள் மூலமாக நேரலை செய்யப்பட்டுள் ளது. இதன்மூலம் ஹமாஸ் தலை வர்களுக்கு முக்கியச் செய்தியை தான் அனுப்புவதாக நேதன்யா குவே ஐ.நா அவையில் தெரிவித்தார். நேதன்யாகுவின் ஐ.நா. உரை யானது, ஏற்கெனவே நிலை குலைந்து போயுள்ள பாலஸ்தீனர் களை - அரசியல் ஆதாயத்துக்காக பகிரங்கமாக மிரட்டுகிற செயல் என கண்டனங்கள் வலுத்துவருகின்றன. ஐ.நா.வில் நேதன்யாகு உரை யாற்றிய போது, அமெரிக்க பிரதிநிதி கள் குழு மட்டுமே கடைசிவரை கைத்தட்டிக் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.