திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் மதுரை தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன் சனிக்கிழமை புதூர் பேருந்து நிலையம், அழகர் கோவில் பிரதான சாலை, முத்துராமலிங்கபுரம் 2-ஆவது தெரு, சங்கர் நகர், மாரியம்மன் கோவில் தெரு, ராமவர்மாநகர், ஐ.டி. பேருந்து நிறுத்தம், மண்மலை மேடு, டி.ஆர்.ஓ.காலனி, டி.ஆர்.காலனி மெயின்ரோடு, முனியாண்டி கோவில் தெரு, காவலர் குடியிருப்பு, ரிசர்வ் லைன், காலாங்கரை, புதூர் வண்டிப்பாதை, ஜவஹர்புரம் பேருந்துநிறுத்தம், செல்வம் காபி பார், மாதா கோவில் பிரதான சாலை, அல்அமீன் சாலை, பாரதி பிரதான சாலை, காந்திபுரம், பாண்டியன் நகர், ராமலட்சுமி நகர், லூர்துநகர் 7-ஆவது மேற்கு பிரதான சாலை, லூர்து நகர் கிழக்கு பிரதான சாலை, சுபம் டீக்கடை, டோபி காலனி, ஆப்பிள் ஸ்டோர், கற்பகநகர், அழகர் நகர், மூன்று மாவடி, சம்பக்குளம், கணேஷ்நகர், விவேகானந்தர் நகர், இ.பி.காலனி, கொடிக்குளம், பாரத் நகர், சூர்யா நகர், ஜவஹர்லால் புரம், மருதம்குளம், நாயக்கன் தெரு, கடச்சனேந்தல், அந்தனேரி, கள்ளழகர் பெருமாள் கோவில் பின்புறம், கனரா பேங்க் தெரு, கண்மாய் மேலத்தெரு, முதலியார் கிழக்குத் தெரு, ஆசாரி தெரு, ஏ.சி.ஐ. பள்ளி, விசாலம் காபி பார், ராஜாஜி பார்க், கரும்பாலை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், சைபர் காலனி, அண்ணா பேருந்து நிலையம், ஜட்கா தோப்பு, அரவிந்த் மருத்துவமனை, அண்ணாநகர் பழைய மேயர் வீடு, எஸ்.எம்.வி.காலனி, ஆலமரம் பேருந்து நிறுத்தம், காமராஜர் தெரு, சாந்தி நிகேதன் அபார்ட்மெண்ட், வைகை காலனி, மாதா கோவில் தெரு, மௌலானா சாகிப் தெரு, சுகுணா ஸ்டோர், சென்ட்ரல் தோட்டம், மானகிரி, கே.கே.நகர், அருள்மலர் கான்வெண்ட், இ.பி.ஆபீஸ், மல்லிகை குடியிருப்பு, லோகாஸ்ட் காலனி, கே.கே.நகர் பிரதான சாலை, வக்போர்டு காலேஜ் பேருந்து நிறுத்தம் ஆகிய பகுதிகளில் வாக்குச் சேகரித்தார்.வாக்குச் சேகரிப்பில் திமுக மதுரை மாநகர் பொறுப்புக்குழுத் தலைவர் கோ.தளபதி, முன்னாள் மேயர் பெ.குழந்தைவேலு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகர் மாவட்டச் செயலாளர் இரா.விஜயராஜன், மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் பி.ராதா, ஜா.நரசிம்மன், பகுதிக்குழுச் செயலாளர்கள் ஏ.பாலு, டி.குமாரவேல், மாவட்டக்குழு உறுப்பினர் என்.ஜெயச்சந்திரன், மதிமுக மாவட்டச் செயலாளர் பொடா மு.பூமிநாதன், காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் வி.கார்த்திகேயன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொகுதிப் பொறுப்பாளர் இரா.பாண்டியம்மாள். சிபிஐ நிர்வாகி ராஜலெட்சுமி உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
படங்கள்: ஜெ.பொன்மாறன்
நடைபயிற்சியாளர்களிடம் வாக்குச் சேகரிப்பு
சு.வெங்கடேசன் அரசரடி ரயில்வே மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொண்டவர்களிடம் சனிக்கிழமை வாக்குச் சேகரித்தார். உடன் திமுக மேற்குத் தொகுதி பொறுப்பாளர் எம்.ஜெயராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மா.கணேசன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.