“வகுப்பறைகளை கைப்பற்ற முயலும் மதவெறி சக்திகளுக்கு எதிராக போராட வேண்டும்
பத்திரிகையாளர் விஜய்சங்கர்
திருப்பூர், ஆகஸ்ட் 24 - மாநாட்டின் ஒரு பகுதியாக மாணவர் சங்க மாநில இணைச் செயலாளர் மோகன் தனிமையில் கருத்தரங்கம் சனிக்கிழமை மாலை நடைபெற்றது. இந்திய மாணவர் சங்க தமிழ்நாடு மாநில 27வது மாநாட்டின் கருத்தரங்கில், சங் பரிவாரின் கல்விக் கொள்கைகள் வகுப்பறைகளை காவிமயமாக்கி வருவதாக பத்திரிகையாளர் விஜய்சங்கர் விமர்சித்தார். ‘வகுப்பறைகளும் வகுப்பு வாதமும்’ என்ற தலைப்பில் உரை யாற்றிய விஜய்சங்கர், சங் பரிவாரின் கல்விக் கொள்கைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து எடுத்துரைத்தார். பாடத்திட்டத்தில் வரலாற்று திரிபு என்சிஇஆர்டி பாடநூல்களில் மகாத்மா காந்தியின் மரணம் குறித்த பதிவில், “ஜனவரி 30, 1948 அன்று கடவுளின் பெயரை உச்சரித்துக்கொண்டபடியே காந்தி அமைதியாக மரணமடைந்தார்” என குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நாதுராம் கோட்சேயின் பெயரை காந்தியின் இடத்தில் புகுத்தி யுள்ளனர். இதைக் குறிப்பிட்டு, அன்று முதல் இன்று வரை சங்கபரிவார் அமைப்புகள் தொடர்ந்து கல்வி யைக் கையகப்படுத்த முயன்று வருவதாகவும், அறிவியலுக்கு புறம்பான வேதக் கருத்துக்களை வேரூன்ற செய்ய முயற்சித்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார். கோத்தாரி கமிஷனின் நோக்கம் “நாடு விடுதலை பெற்ற பிறகு, பிரதமர் நேரு ஜாதி, மதம், மொழி பிளவுகளால் மூழ்கிக் கிடக்கும் இந்திய சமூகத்தை மீட்க விரும்பினார். அதன்படி உரு வாக்கப்பட்டதுதான் கோத்தாரி கமிஷன். பிற்போக்குச் சிந்தனை களை மாற்றி, மனிதர்களை அறி வியல் மனப்பான்மையுடன் சிந்திக்கக்கூடிய நவீன கல்விக் கொள்கையை உருவாக்க திட்டமிடப்பட்டது. சுதந்திரத்திற்குப் பிறகு பல்வேறு இயக்கங்கள் வெவ்வேறு கல்விக் கொள்கைகளைக் கொண்டி ருந்தன. இடதுசாரி இயக்கங்கள் அறி வியல்பூர்வமான சோசலிச சிந்தனைகள் கொண்ட கல்வி முறையை விரும்பின. காங்கிரஸ் அறிவியல் பார்வையுடன் கல்வியை வடிவமைக்க விரும்பியது. திராவிட இயக்கங்கள் பகுத்தறிவுப் பார்வை கொண்ட கல்விமுறையை எதிர்பார்த்தன. ஆனால் இந்துத்துவ இயக்கம் அறிவியலுக்கு எதிராக வேத கலாச்சாரத்தை மீட்டுக் கொண்டுவர திட்டமிட்டது” என அவர் விவரித்தார். பாஜக ஆட்சியில் மூடநம்பிக்கை 1998ஆம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சி அமைந்த உடனேயே, பல்கலைக்கழகங்களில் ஜோதிடப் பாடத்திட்டங்களை உருவாக்கினர். ‘ரிக்வேதம் முதல் ரோபோடிக்ஸ் வரை’ கண்காட்சி நடத்தினர். கல்வி யைக் காப்பாற்றுவோம் என்ற பெய ரில் பாடத்திட்டத்தில் வேதத்தைக் கற்க வேண்டும் என திட்டங்களை உரு வாக்கினர் என்றும் குறிப்பிட்டார். கொரோனா பெருந்தொற்று காலத்தில் உலகமே தடுப்பூசிக்காக ஏங்கிய சமயத்தில், “பால்கனியில் வந்து கைகளைத் தட்டுங்கள்” என்று பிரதமர் மோடி கூறியதையும், “விநாயகருக்கு தலைமாற்று அறுவை சிகிச்சை செய்தது அறி வியலின் உச்சம்” என்று கட்டுக் கதைகளைப் பரப்பியதையும் விஜய்சங்கர் விமர்சித்தார். வரலாற்று திரிபுகள் ஆரியர்கள் ஆர்க்டிக் பகுதியில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் என்று தரவுகள் உள்ளன. ஆனால் திலகர் கூறிய கூற்றின்படி “ஆர்க்டிக் பகுதி யில் இருந்து ஆரியர்கள் வர வில்லை, ஆர்க்டிக்தான் சுழற்சியில் வேறு பக்கம் சென்றது” என்று குறிப் பிடப்பட்டுள்ளது என விஜய்சங்கர் தெரிவித்தார். அன்று முதலே அவர்கள் இதைத் தொடர்ந்து செய்துகொண்டு வருகிறார்கள். புராணங்களை வர லாறாகக் கட்டமைக்க விரும்பு கிறார்கள். வரலாறு சான்று களின் அடிப்படையில் உருவாக்கப் படுவது, புராணங்கள் கட்டுக்கதை களின் அடிப்படையில் உருவாக்கப் படுவது. இந்த இரண்டையும் ஒன்றிணைத்து வரலாறாக மாற்ற விரும்புகிறார்கள் என்று அவர் குற்றம்சாட்டினார். ரொமிலா தாப்பர், இர்பான் ஹபீப் போன்ற அறிஞர்களின் ஆய்வ றிக்கைகளைப் பாடத்திட்டங்களில் இருந்து அப்புறப்படுத்துவதாகவும், ஐந்தாம் வகுப்பு பாடநூலில் புஷ்பக விமானம் 2000 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது என்று பாடம் வைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். “ஒருபுறம் வரலாற்றை மாற்று வது, மறுபுறம் அறிவியலுக்குப் புறம்பான கருத்துக்களைப் பரப்பு வது, பாடத்திட்டங்களாகப் புகுத்துவது என தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்கள்,” என விஜய்சங்கர் தெரிவித்தார். வித்யா பாரதி என்கிற ஆர்எஸ்எஸ் அமைப்பு நாடு முழு வதும் 12 ஆயிரம் பள்ளிகளை நடத்தி வருகிறது. அதில் எண்ணற்ற மாண வர்கள் படித்து வருகின்றனர். இவர்கள் பரப்ப விரும்பும் கட்டுக் கதைகளை அவர்களுக்குக் கற்றுத் தருகிறார்கள் என்று அவர் எச்சரித்தார். “ஒரு மனிதனை மனிதனாக உருவாக்குவதில் கல்வி முக்கியப் பங்கு வகிக்கிறது என்பதை உணர்ந்து ‘கேப்சரிங் யங் ஹிந்து மைன்ட்ஸ்’ என்ற திட்டத்தின்படி அவர்கள் தொடர்ந்து இது போன்ற செயல்களைச் செய்து வரு கிறார்கள்,” என விஜய்சங்கர் தெரி வித்தார். இது போன்ற திட்டங்களை முறி யடிக்க மாணவர் சங்கத்திடம் மட்டுமே கொள்கை உள்ளதாக வும், வகுப்பறைகளில் இந்த வகுப்பு வாதச் சக்திகள் நுழைவதைத் தடுத்து வகுப்பறைகளைப் பாதுகாப்பதில் மாணவர் சங்கங்களின் பங்கு முக்கி யத்துவம் வாய்ந்தது என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். இந்த மாநாட்டில் ‘வணிகமய மாதலுக்கு எதிரான இயக்கம்’ என்ற தலைப்பில் மாணவர் சங்க முன்னாள் மாநிலச் செயலாளரும், சிஐடியு மாநில துணைச் செயலாள ருமான எஸ்.கண்ணன் கருத்துரை யாற்றினார்.