வாஷிங்டன்,டி.சி.நவ.5- அமெரிக்காவின் ஒவ்வொரு மாநிலத்திலும் நேர வித்தியாசம் இருப்பதால் ஒவ்வொரு மாநிலத்திலும் அதிகாலை 5.30, 6.00, 7.00 என வெவ்வேறு நேரங்களில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு துவங்கியது. அனைத்து மாநிலங்களிலும் வாக்குப்பதிவு முடிந்த பிறகே வாக்குகள் எண்ணிக்கை துவங்கும். அதிகாரப்பூர்வ வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாக நடைபெற்ற வாக்குப்பதிவு நாட் களில் மொத்தமுள்ள 18.65 கோடி வாக்கா ளர்களில் சுமார் 7.8 கோடி அமெரிக்கர்கள் வாக்களித்து விட்டனர். பதிவு செய்யப்பட்ட வாக்குகளானது,முதலில் தேர்தல் நாளன்று பதிவு செய்யப்பட்ட வாக்குகள், இரண்டாவதாக முன்கூட்டியே பதிவு செய்யப்பட்ட வாக்குகள், தபால் வாக்குகள், சந்தேகத்திற்குரிய வாக்குகள், பின்னர் வெளி நாட்டு மற்றும் ராணுவ வாக்குகள் என வரிசையாக கணக்கிடப்படும். ஜனநாயக கட்சியின் வேட்பாளர் கமலா ஹாரிஷ், குடியரசுக்கட்சியின் வேட்பாளர் டிரம்ப் ஆகிய இருவருக்கும் இடையேயான போட்டி மிக கடுமையாக உள்ளது எனவும் இதனால் வெற்றி வித்தியாசம் மிக சொற்பமான வாக்குகளின் அடிப்படையில் அமையலாம். அவ்வாறு நடந்தால் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் முடிவு தேர்தல் நாளன்று இரவு தாமத மாகவோ, அடுத்த நாள் அதிகாலை நேரத்திலோ வெளியாகும். உதாரணமாக 2016 ஆம் ஆண்டில், டிரம்ப் முதன்முதலில் ஜனாதிபதி யாக வென்றபோது, தேர்தலுக்கு மறுநாள் அதிகாலை வேளையில் வெற்றி அறிவிக்கப்பட் டது. அதேபோல 2012 இல் பராக் ஒபாமா இரண்டா வது முறைய ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டபோது வாக்குப்பதிவு நாளன்று நள்ளிரவுக்கு முன்பே வெற்றிக் கணிக்கப்பட்டது. தேர்தல் முடிவில் வெற்றியாளராக அறிவிக்கப்படும் நபர் 2025 ஜனவரி மாதம் 20 அன்று அமெரிக்காவின் 60 ஆவது ஜனாதிபதி யாக பதவி ஏற்பார்.