tamilnadu

img

சாலை விபத்தை திசைதிருப்பும் காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டோர் புகார்

சாலை விபத்தை திசைதிருப்பும் காவல்துறை நடவடிக்கை எடுக்கக்கோரி பாதிக்கப்பட்டோர் புகார்

சேலம், ஜூலை 19- ‘கார் மோதி உயிரிழந்தார்’ என்ற தக வலுக்கு மாறாக தவறிவிழுந்து உயிரி ழந்தார் என பொய்யாக முதல் தகவல் அறிக்கை தயார் செய்த தாரமங்கலம் காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர். சேலம் மாவட்டம், எடப்பாடி அருகே  உள்ள இருப்பாளி, காட்டுவளவு பகுதி யைச் சேர்ந்தவர் யசோதா. இவரது கண வர் சண்முகம், கடந்த மே 28 ஆம் தேதி,  தனது உறவினருடன் இருசக்கர வாக னத்தில் சென்றுள்ளார். அப்போது, சண் முகம் விபத்தில் சிக்கியுள்ளார் எனவும், அரசு மருத்துவமனைக்கு வருமாறு அங்கிருந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் தெரிவித்துள்ளார். அதன்பேரில் மருத் துவமனைக்கு சென்றபோது, சண்முகம்  இறந்துவிட்டார் என தகவல் வந்துள் ளது. இதனால் அதிர்ச்சியடைந்த யசோதா மற்றும் அவரது உறவினர் கள் தாரமங்கலம் காவல் நிலையத் திற்கு சென்று முறையிட்டுள்ளனர். அங் கிருந்த காவலர் ஒருவர், வாகனம் ஏதும்  மோதி இறக்கவில்லை எனவும், தவறி  விழுந்து விட்டார் என எழுதி தருமாறு யசோதாவிடம் கேட்டுள்ளார். ஆனால்,  சண்முகத்தின் குடும்பத்தினர், விபத்து  நடந்த இடத்திற்கு சென்றபோது அங் கிருந்த கடையில் சிசிடிவி பழுதாகி யுள்ளது. அங்கிருந்தவர்களிடம் விசா ரித்ததில் சண்முகம் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது தெரியவந்தது. இந்த தகவலை காவல் நிலையத் தில் கூறுகையில், அதனை ஏற்காத காவ லர், ‘நான் சொல்வதைப் போல் எழுதிக்  கொடுக்க வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம்’ என தெரிவித்துள்ளார். சம்பந்தப்பட்ட காரை காவல் நிலையத் திற்கு கொண்டு வந்து பார்த்தபோது, அதில் கீறல் இருந்ததால் சண்முகத்தை  அந்த கார் தான் இடித்துள்ளது என  கண்டுபிடித்த போதும், காவல் துறை யினர் ஏற்க மறுத்துள்ளனர். தொடர்ந்து வலியுறுத்தியதன்பேரில், எப்ஐஆர்-யை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என  போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால்,  இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை. எனவே, வாகன விபத்தை ஏற்படுத்தி சென்ற கார் ஓட்டுநர் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தங் களுக்கு நீதி வழங்க வேண்டும். மேலும்,  உண்மைக்கு புறம்பாக தாரமங்கலம் காவல் நிலையத்தில் எழுதி வாங்கிய காவலர்கள் மீது உரிய நடவடிக்கை வேண்டும் என வலியுறுத்தி சண்முகத் தின் மனைவி யசோதா மற்றும் அவரது உறவினர்கள் சனியன்று சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகாரளித்தனர். சிஐ டியு மாவட்ட நிர்வாகி ஆர்.வெங்கட பதி உடனிருந்தார்.