43 லட்சம் தமிழக மாணவர்களின் கல்வியை சிதைக்க ஒன்றிய அரசு முயற்சி
“தமிழ்நாட்டிற்கு ஆண்டுக்கு 10 ஆயி ரம் கோடி கல்விக்கு தருவதாக கூறினா லும் ஒன்றிய அரசின் தேசிய கல்விக் கொள் கையை ஏற்கமாட் டோம்” என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித் தார். கடலூர் மாவட்டம், வேப்பூர் அருகே உள்ள திருப்பெயர் பகுதியில் பள்ளிக் கல்வித் துறை மற்றும் தமிழ்நாடு மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் சார்பில் நடைபெற்ற, ‘பெற்றோர்களைக் கொண்டாடுவோம்’ 7-ஆவது மண்டல மாநாட்டில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்றார். பள்ளிக்கல் வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வரவேற்றார். அமைச் சர்கள் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், க. பொன்முடி, சி.வே. கணேசன், எஸ்.எஸ். சிவசங்கர், பாடநூல் கழகத் தலை வர் திண்டுக்கல் ஐ. லியோனி மற்றும் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பி னர்கள், அரசுத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரி யர் கழகத்தின் ‘அப்பா’ (APPA) என்ற பெயரில் PTA செயலியை தொடங்கி வைத்த முதல்வர், பெற்றோர் ஆசிரி யர் கழக மாநாட்டு சிறப்பு மலரை வெளியிட்டு உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரி யர் கழகத்தின் ‘அப்பா’ (APPA) என்ற பெயரில் PTA செயலியை தொடங்கி வைத்த முதல்வர், பெற்றோர் ஆசிரியர் கழக மாநாட்டு சிறப்பு மலரை வெளி யிட்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:
43 லட்சம் குழந்தைகளின் கல்வியை சிதைக்க முயற்சி
“ஒன்றிய அரசு 2 ஆயிரத்து 152 கோடி ரூபாயை தமிழ்நாட்டுக்கு தராமல் நிறுத்தி வைத்திருக்கிறது. இது 43 லட்சம் பள்ளிக் குழந்தைகளின் நலனுக்காகச் செலவு செய்ய வேண்டிய தொகை. தேசிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்ளவில்லை என்று தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய நிதியைத் தர மறுக்கிறார்கள். தேசியக் கல்விக் கொள்கை என்பது, சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. தமிழர்களுக்கு தமிழ்நாட்டுக்கு வேட்டு வைக்கும் கொள்கை. நம்முடைய குழந் தைகளின் எதிர்காலத்திற்கு இது ஆபத்து.
இந்தித் திணிப்புக்காக மட்டுமே எதிர்க்கவில்லை
இந்தியை திணிக்கிறார்கள் என்ற ஒரே காரணத்துக்காக மட்டுமே நாம் தேசியக் கல்விக் கொள்கையை எதிர்க்கவில்லை; மாண வர்களை பள்ளிக் கூடங்களில் இருந்து விரட்டுகின்ற கொள்கை அது. பள்ளிக்கூடத்தை விட்டு துரத்துகின்ற கொள்கை அது. பட்டியலின, பழங்குடியின, இதர பிற் படுத்தப்பட்ட மக்களுக்கு இப்போது உதவித் தொகை வழங்குகிறோம். இதை ஒன்றிய அரசின் திட்டம் மறுக்கின்றது. மூன்றாம் வகுப்பில் பொதுத் தேர்வு - ஐந்தாம் வகுப்பில் பொதுத் தேர்வு - எட்டாம் வகுப்பில் பொதுத் தேர்வு என்று வைத்து பிள்ளைகளை வடிகட்டப் பார்க்கிறார்கள். ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை செமஸ்டர் தேர்வு முறை யை கொண்டு வரப் போகிறார்கள். அதாவது ஆல் இண்டியா எக்ஸாம் போல நடக்கும்.
2000 விரும்பிய படிப்பை மட்டுமல்ல படிக்கவே வேண்டாம் என்கிறார்கள்
உங்கள் மகனோ, மகளோ 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு விரும்பிய கல்லூரியில் விரும்பிய பாடத்தில் உடனே போய் சேர முடியாது. இப்போது மருத்துவக் கல்லூரியில் சேர நீட் தேர்வு வைப்பது போல, பொறியியல் படிப்புக்கும், ஆர்ட்ஸ் காலேஜ்க்கும் தேர்வு வைத்துத் தான் எடுப்பார்கள். இதை அந்தக் கல்லூரி நடத்தாது. தேசிய அளவில் தேர்வு ஏஜென்சிதான் நடத்தும். இதைவிட கொடுமை என்ன தெரியுமா? 10-ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு வரை படிப்பைத் தொடர விரும்பாத மாணவர்கள் அவர்களாகவே வெளியேறலாம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன்… இப்படிச் சொல்வதே படிக்காமல் ‘போ’ என்று விரட்டுவ தற்குச் சமமா? இல்லையா? 2000 ஆண்டு பின்னோக்கி தமிழ்நாடு சென்று விடும்! 6-ஆம் வகுப்பு முதல் தொழில் கல்வி என்கிற பெயரால் குலக்கல்வித் திட்டத்தை அறிமுகப் படுத்தப் போகிறார்கள். குலத்தொழில், சாதித் தொழில் என்று மனுநீதி சொல்கின்ற அநீதி யாக தொடராமல், படித்து முன்னேற நினைப்ப வர்களை மீண்டும் அதை நோக்கித் தள்ளப் பார்க்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துத்தான் தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று உறுதியாக சொல்லுவோம். இந்தத் திட்டத்தில் கையெழுத்திட்டால் தான் 2000 கோடி ரூபாய் கிடைக்கும் - பத்தாயிரம் கோடி ரூபாய் பணம் கிடைக்கும் என்று சொன்னாலும் நாங்கள் கையெழுத்திட மாட்டோம். இரண்டாயிரம் கோடி ரூபாய் பணத்துக்காக இன்றைக்கு நாங்கள் கையெ ழுத்திட்டால், என்ன ஆகும்? 2000 ஆண்டுக்கு பின்னோக்கி நம்முடைய தமிழ்ச் சமுதாயம் போய்விடும். அந்தப் பாவத்தை நான் ஒருபோதும் செய்ய மாட்டேன்.” இ்வ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.