tamilnadu

img

மதுரையில் மாணாவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த இரண்டு பேராசிரியர்கள் போக்சோவில் கைது

இரண்டு பேராசிரியர்கள் போக்சோவில் கைது 
  மதுரை அருகேயுள்ள கருமாத்தூர் அருளானந்தர் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் பேராசிரியர் ஜெகன் கருப்பையா கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது மேலும் ஒரு பேராசிரியர் கைது.
     மதுரை மாவட்டம் கருமாத்தூரில் உள்ள அருளானந்தர் கல்லூரியில் ஊரக வளர்ச்சித்துறையின் பேராசிரியர் ஜெகன் கருபையா கடந்த 8 ஆண்டுகளாக அக்கல்லூரியில் பணியாற்றி வருகிறார், அவர் அதே கல்லூரியில் முதலாம் ஆண்டு பயிலும் 17 வயது மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அம்மாணவி நீதிமன்றத்தில் நேரடியாக புகார் அளித்தார்.  
அதனடிப்படையில் மதுரை டிஐஜி பொன்னி தலைமையில் விசாரணை நடைபெற்று பேராசிரியர் ஜெகன் கருப்பையா போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.அதன்பின்பு வேறு மாணவிகள் யாரும் பாதிக்கப்பட்டுள்ளனரா என்றும் இதில் வேறு யாரும் தொடர்பில் இருக்கிறார்களா என்றும் விசாரணை நடைபெற்றதில் மேலும் ஒரு பேராசிரியர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.